இந்தியா

“விவசாயத்தை அழிக்க நினைத்தால் இந்தியாவும் பலவீனமாகும்” - மோடி அரசுக்கு ராகுலின் எச்சரிக்கை மணி!

விவசாயிகளின் உரிமையை மத்திய மோடி அரசு நசுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“விவசாயத்தை அழிக்க நினைத்தால் இந்தியாவும் பலவீனமாகும்” - மோடி அரசுக்கு ராகுலின் எச்சரிக்கை மணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழர் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி.

அப்போது விழா மேடையில் தமிழ் மொழி மற்றும் கலாசாரம் இந்தியாவின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்துக்கும் முக்கிய பங்காற்றும் எனக் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறும் சூழல் விரைவில் ஏற்படும்.

இந்திய ஒன்றியத்திற்குள் சீன படை என்ன செய்கிறது? அவர்கள் ஏன் இங்கு இருக்கிறார்கள்? இது பற்றியெல்லாம் பிரதமர் மோடி வாய்த் திறவாதது ஏன்? சீன படையினரின் ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

ஒன்றிரண்டு கார்ப்பரேட் நண்பர்களுக்காக நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை பிரதமர் மோடி குழித்தோண்டி புதைக்க எண்ணுகிறார். விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்தொழிப்பதால் நாடு செழித்தோங்கும் என நினைப்பவர்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்கவேண்டும்.

விவசாயிகள் பலவீனமடைந்திருந்த போதெல்லாம் இந்தியாவும் பலவீனப்பட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்பதை சுட்டிக்காட்டி மோடி அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories