இந்தியா

விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்து விலகினார் கிசான் தலைவர் பூபீந்தர் சிங்!

வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்து விலகினார் கிசான் தலைவர் பூபீந்தர் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட குழுவில் இருந்து பூபிந்தர் சிங் என்பவர் வெளியேறியுள்ளார்.

இவர் பாரதிய கிசான் யூனியன் தலைவராக உள்ளார். இவர் உள்பட 4 உறுப்பினர்களும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பேசி வந்ததாக விவசாயிகள் புகார் எழுப்பியிருந்தனர். ஆகவே இந்த குழுவின் முன்னதாக விவசாயிகள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை என்று கூறியிருந்தனர்.

விவசாயிகள் போராட்டம்: சுப்ரீம் கோர்ட் அமைத்த குழுவில் இருந்து விலகினார் கிசான் தலைவர் பூபீந்தர் சிங்!

இந்த சூழ்நிலையில் தான் இந்த குழுவில் இடம் பெற்றிருந்த பூபிந்தர் சிங் மான் வெளியேறி இருக்கிறார். உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் குழுவில் இருந்து தற்போது ஒருவர் வெளியேறியதன் காரணமாக இந்த குழு மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

வரும் திங்கட்கிழமை குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு தடைகோரி மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. அப்போது இந்த குழு தொடர்பாக உச்ச நீதிமன்றம் புதிய முடிவினை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories