இந்தியா

“உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்று வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை உடனடியாக நிறுத்துக” : மு.க.ஸ்டாலின்

வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்று வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை உடனடியாக நிறுத்துக” : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் ஒன்றரை மாத காலத்துக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்துவது குறித்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, பிரச்னைகளுக்கு தீர்வு காண குழு அமைக்க தலைமை நீதிபதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

போதுமான அளவுக்கு கலந்தாலோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால்தான் போராட்டம் நடந்து வருவதாக அட்டார்னி ஜெனரலிடம் நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும், வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையெனில் அதனை உச்சநீதிமன்றம் செய்ய நேரிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு :

“வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்யவேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய இடையீடு, அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளைச் சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது.

பல்வேறு தரப்புகளில் இருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளைக் கருத்திற்கொண்டும், இலட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள், அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குச் செவிசாய்த்தும், வேளாண் சட்டங்களைச் செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்தவேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories