இந்தியா

“புதுச்சேரி மாநிலம் ஏனாமில் டாக்டர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்”- துவக்கி வைத்தார் நாராயணசாமி!

டாக்டர் கலைஞர் பெயரில் புதுச்சேரி மாநிலம் ஏனாமில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

“புதுச்சேரி மாநிலம் ஏனாமில் டாக்டர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்”- துவக்கி வைத்தார் நாராயணசாமி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி துவக்கி வைத்தார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் டாக்டர் கலைஞர் பெயரில், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டது. இதனை முதல்வர் நாராயணசாமி துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து சி.எஸ்.ஆர் நிதியின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அம்பேத்கர் அறிவுசார் மையத்தின் திறப்பு விழாவுக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமை வகித்தார். இந்த மையத்தை திறந்து வைத்து, முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைவர் எனப் புகழாரம் சூட்டினார்.

“புதுச்சேரி மாநிலம் ஏனாமில் டாக்டர் கலைஞர் பெயரில் காலை சிற்றுண்டி திட்டம்”- துவக்கி வைத்தார் நாராயணசாமி!

சமீபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு முழு கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் நாராயணசாமி, இதுபோல வறுமை கோட்டுக்கு கீழுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும், இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசுகையில், “புதுச்சேரி மக்களுக்கு எதிராக இருப்பவரை புதுச்சேரியை விட்டு அனுப்பும் வகையில் 8 முதல் 12ம் தேதி வரை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டம், புதுச்சேரியை ஸ்தம்பிக்கும் வகையில் இருக்கவேண்டும். கிரண்பேடிக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன்.

புதுச்சேரியின் ஒரு தொகுதியில் நின்று கிரண்பேடியால் ஜெயிக்க முடியுமா? டெபாசிட் வாங்க மாட்டார். ஏனாமில் போட்டியிட்டால் ஒரு ஓட்டு கூட அவருக்கு கிடைக்காது” என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் சவால் விடுத்தார்.

மேலும் இந்நிகழ்வில் சபாநாயகர் சிவக்கொழுந்து, துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories