இந்தியா

பா.ஜ.க அரசு தொடர்ந்து பிடிவாதம்... விவசாயிகளுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க அரசு தொடர்ந்து  பிடிவாதம்... விவசாயிகளுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற 5 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெல்லியில் இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய வேளாண் துறையின் அழைப்பின் பேரில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அரசுடனான இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

பா.ஜ.க அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டங்களில் திருத்தங்கள் வேண்டுமானால் மேற்கொள்ளலாம் என்று மீண்டும் மத்திய அரசு இன்றும் கூறியுள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டமியற்ற வேண்டும் என்கிற விவசாயிகளுடைய கோரிக்கை தொடர்பாக ஒரு குழு அமைக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அதனை விவசாயிகள் தரப்பில் ஏற்கவில்லை.

விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மீது இன்று எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நான்காம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க அரசு தொடர்ந்து  பிடிவாதம்... விவசாயிகளுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

இதனிடையே மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை மீது மத்திய அரசு விவசாயிகளுக்கான மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் சுற்றுச்சூழல் சட்டம் தொடர்பாக விவசாயிகள் மீது அபராதம் ஏதும் விதிக்கப்படமாட்டாது என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மூன்று சட்டங்களும் திரும்பப் பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories