இந்தியா

“எங்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்” - மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்!

புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதாக மத்திய அரசு கூறியுள்ளதற்கு விவசாயிகள் மீண்டும் நிராகரித்துள்ளனர்.

“எங்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்” - மத்திய அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் சட்டங்களில் திருத்தம் என்ற மத்திய அரசினுடைய சலுகை அறிவிப்பை விவசாய சங்கங்கள் மீண்டும் நிராகரித்தன. மேலும், விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசுக்கு விவசாய சங்கங்கள் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளனர்.

சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் தெரிவிக்கும் படியும் கூறி விவசாயத் துறை இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாய சங்கங்களுக்கு இமெயில் மூலம் டிசம்பர் 9-ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார்.

அதற்கு பதில் அனுப்பி உள்ள விவசாயிகள் பேச்சுவார்த்தையில் நிராகரிக்கப்பட்ட விபரங்களைதான் அரசு எழுத்து மூலம் மீண்டும் அனுப்பி இருப்பதாக கூறியுள்ளது. எனவே அதனை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு இறங்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதேபோன்று போராட்டத்தில் ஈடுபடாத சில அரசியல் சேர்ப்பு சங்கங்களை அழைத்து பேசுவதையும் அரசு நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories