இந்தியா

“விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்”: பஞ்சாப்பில் இருந்து படைகளோடு கிளம்பிய 1500 ட்ராக்டர்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 1,000 கிராமங்களில் இருந்து சுமார் 1,300 டிராக்டர் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடம் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர்.

“விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்”: பஞ்சாப்பில் இருந்து படைகளோடு கிளம்பிய 1500 ட்ராக்டர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 17 நாட்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 5ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இதனிடையே, ஜெய்ப்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் நாளை விவசாயிகள் மறியல் போராட்டம் அறிவித்துள்ளனர்.

இதனால், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா பகுதிகளிலிருந்து இந்த நெடுஞ்சாலையை நோக்கி விவசாயிகள் செல்லாமல் இருப்பதற்காக இப்பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அதேவேளையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது.

“விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்”: பஞ்சாப்பில் இருந்து படைகளோடு கிளம்பிய 1500 ட்ராக்டர்கள்!

ஆனால் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் முரண்டு பிடித்து வருகிறது. தங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால் விவசாயிகள் போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.

டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகளின் எண்ணிக்கையை மேலும் வலுப்படுத்த தமிழகம், ராஜஸ்தான், பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கள் டெல்லியை முற்றுகையிட தொடர்ந்து அணிவகுத்த வண்ணம் உள்ளனர்.

அதன் ஒருபகுதியாக, பஞ்சாப் மாநிலத்தின் ஏழு மாவட்டங்களில் மட்டும் 1,000 கிராமங்களில் இருந்து சுமார் 1,300 டிராக்டர் தள்ளுவண்டிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்ட வாகனங்களுடம் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை டெல்லியை முற்றுகையிட அணிவகுத்துள்ளனர். இந்த வார இறுதியில் அவர்கள் டெல்லியை அடைவார்கள் என போராட்ட ஒருங்கினைப்பாளர் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகள் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம்”: பஞ்சாப்பில் இருந்து படைகளோடு கிளம்பிய 1500 ட்ராக்டர்கள்!

இதுதொடர்பாக பஞ்சாப் விவசாயிகளை ஒருங்கிணைத்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும் கே.எம்.எஸ்.சி தலைவர் சத்னம் சிங் பன்னு கூறுகையில், “ அமிர்தசரஸ், குர்தாஸ்பூர், தரன் தரன், ஜலந்தர், ஹோஷியார்பூர், பெரோஸ்பூர் மற்றும் மோகா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த போராட்டக்காரர் இந்த வாகனத்தில் உள்ளனர்.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இருப்பதால் டெல்லிக்குள் அனுமதிக்கவில்லை என்றால் நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்வோம். அதுமட்டுமல்லாது, எங்களுக்கு தேவையான உணவு, துணி, எல்பிஜி சிலிண்டர்கள், வாளிகள் போன்றவற்றுடன் செல்கிறோம். டெல்லி வானிலையும் சமாளிக்க தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி போராட்டத்திற்கு இரண்டாவது அத்தியாயத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளது மத்திய அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories