இந்தியா

“இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை” : வேளாண் சட்டங்களை திரும்ப பெறாததால் விவசாயிகள் ஆவேசம்!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்ததால் பேச்சுவார்த்தை முடங்கியது.

“இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை” : வேளாண் சட்டங்களை திரும்ப பெறாததால் விவசாயிகள் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

1 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றுள்ள போராட்டத்தால், டெல்லி புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்குமிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சுமுக தீர்வு எட்டப்படாததால் 10 நாட்களுக்கு மேலாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்ததால் பேச்சுவார்த்தை முடங்கியது. இன்றைய தினம் வேளாண்துறை அமைச்சர் மற்றும் உணவுத்துறை அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

“இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை” : வேளாண் சட்டங்களை திரும்ப பெறாததால் விவசாயிகள் ஆவேசம்!

இதற்கிடையில் நேற்று இரவு திடீரென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 11 சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். நள்ளிரவு 12 மணிவரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று அமித்ஷா விவசாயப் பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

விவசாயிகள் எழுப்பக் கூடிய பிரச்சனைகள் தொடர்பான திருத்தங்களை வேண்டுமானால் அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார். எந்தெந்த திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்கிற குறிப்பினை இன்று காலை 11 மணி அளவில் விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அமித்ஷா சட்டங்களை திரும்ப பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறியதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று விவசாயிகள் அறிவித்திருக்கிறார்கள்.

“இனி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை” : வேளாண் சட்டங்களை திரும்ப பெறாததால் விவசாயிகள் ஆவேசம்!

இது தொடர்பாக இன்று நண்பகல் அளவில் விவசாய சங்க கூட்டமைப்பினர் சிங்கு எல்லையில் கூடி அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர். இன்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நேரம் எதையும் மத்திய அரசு உறுதிபடுத்தவில்லை என்பதால் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடங்கிய நிலை நீடிக்கிறது.

banner

Related Stories

Related Stories