இந்தியா

டெல்லியில் தீவிரமடையும் கொரோனா பரவல்.. குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்கிறது மத்திய அரசு?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை இந்த ஆண்டு மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் தீவிரமடையும் கொரோனா பரவல்.. குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்கிறது மத்திய அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்புக்கு இடையே சமூக இடைவெளியுடன் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. 18 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்ட கூட்டத் தொடர் கொரோனா தொற்று காரணமாக எட்டே நாட்களில் முடித்துக் கொள்ளப்பட்டது.

அப்போது 40க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. கூட்டத்தொடர் முடிந்த பிறகு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் சில அமைச்சர்களுக்கும் தொற்று ஏற்பட்டது.

தற்போது, டெல்லியில் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. எனவே, நவம்பர் இறுதிவாரம் தொடங்க வேண்டிய குளிர்கால கூட்டத்தொடரை இந்த ஆண்டு நடத்தத் தேவை இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனவரி மாத கடைசி வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை தொடங்கினால் போதும் என்று மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது கடந்த சில ஆண்டுகளாகவே பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற வரலாற்றில் 1975, 1979 மற்றும் 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் மட்டும் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories