இந்தியா

விடியும் வரை வெப் சீரிஸ் பார்த்த இளைஞரால் உயிர்பிழைத்த 75 பேர்... மராட்டியத்தில் நடந்த ஆச்சர்ய சம்பவம்! 

தனது குடும்பத்தினரை வெளியேற்றிய அந்த இளைஞர் மற்ற குடும்பத்தினரையும் வெளியேற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.

விடியும் வரை வெப் சீரிஸ் பார்த்த இளைஞரால் உயிர்பிழைத்த 75 பேர்... மராட்டியத்தில் நடந்த ஆச்சர்ய சம்பவம்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகாராஷ்டிர மாநிலத்தின் டோம்பிவிலியின் கொபர் என்ற பகுதியில் இருந்த 2 மாடி குடியிருப்பு கட்டடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. பழமையான கட்டடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என 9 மாதங்களுக்கு முன்பே அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு நோட்டீஸும் ஒட்டப்பட்டது.

ஆனால், வேறு பகுதிக்கு இடம்பெயரும் அளவிற்கு அக்குடியிருப்பு வாசிகளுக்கு வசதி இல்லாத காரணத்தால் அதே கட்டடத்திலேயே வசித்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று (அக்.,30) அதிகாலை சமயத்தில் அக்கட்டடம் இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல் அக்குடியிருப்பில் வசித்தவர்கள் அனைவரும் தப்பித்திருக்கிறார்கள்.

18 வீடுகள் கொண்ட அக்குடியிருப்பில் 75 பேர் வசித்து வந்திருக்கிறார்கள். அதில், குணால் என்ற இளைஞர் ஒருவர் விடிய விடிய தனது செல்ஃபோனில் வெப் சீரிஸ் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் வீட்டின் சமையலறையில் விரிசல் ஏற்படுவதை கண்டிருக்கிறார்.

இதனையடுத்து, தனது குடும்பத்தினரை வெளியேற்றிய அந்த இளைஞர் மற்ற குடும்பத்தினரையும் வெளியேற்றும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். அனைவரும் சாலையில் தஞ்சம் அடைந்த 20 நிமிடத்தில் கட்டடம் முழுவதும் சரிந்து விழுந்தது. அந்த இளைஞர் சாதுர்யமாகச் செயல்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறது. இளைஞரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories