இந்தியா

“கொரோனா 2-ஆவது அலை வந்தால், இந்திய பொருளாதாரம் மேலும் மோசமாக்கும்” : மோடி அரசுக்கு ‘RBI’ எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நிகழ்ந்தால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

“கொரோனா 2-ஆவது அலை வந்தால், இந்திய பொருளாதாரம் மேலும் மோசமாக்கும்” : மோடி அரசுக்கு ‘RBI’ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவிய வைரஸ் இன்னும் உலகில் உள்ள 180 நாடுகளை தன்வசப்படுத்தியுள்ளது. அதில். இந்தியாவும் ஒன்று. நாடுமுழுவதும் ஊரடங்கால் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது.

இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைக் குழையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி முன்பே எச்சரித்தது.

அதுமட்டுமின்றி, இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2020ம் ஆண்டில் - 10.3 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

“கொரோனா 2-ஆவது அலை வந்தால், இந்திய பொருளாதாரம் மேலும் மோசமாக்கும்” : மோடி அரசுக்கு ‘RBI’ எச்சரிக்கை!

இந்நிலையில், கொரோனா 2-ஆவது அலை ஏற்பட்டால், பொருளாதாரம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம், நேற்று முன் தினம் ஆளுநர் சக்திகாந்த தாஸ்தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பின் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில், “நடப்பு 2020-21-ம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. எனினும், இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் பெற்றன. அதன் மூலமாக பொருளாதாரம் மீள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டன.

எனினும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் சில தடைகள் காணப்படுகின்றன. அவற்றில் முதலாவது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வீசக்கூடும் என்பது. அவ்வாறு நிகழ்ந்தால் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

“கொரோனா 2-ஆவது அலை வந்தால், இந்திய பொருளாதாரம் மேலும் மோசமாக்கும்” : மோடி அரசுக்கு ‘RBI’ எச்சரிக்கை!

அதுமட்டுமல்லாது, நடப்பு நிதியாண்டின் 2-ஆவது அரையாண்டில் பணவீக்கம் 4.5 முதல் 5.4 சதவிகிதத்திற்குள் இருக்கும்என்று ரிசர்வ் வங்கி கணித் துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என்றும் அது கூறியிருந்தது.

இந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், ஏழ்மை நிலையிலுள்ளவர்களின் உடல்நலத்தையும் அவர்களின் பொருளாதார நிலையையும் பாதுகாப்பது அவசியத்தை மோடி அரசு உணரவேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories