இந்தியா

பா.ஜ.க கூட்டணியில் பிளவு - பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு : என்ன காரணம்?

பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிடப் போவதாக எல்.ஜெ.பி அறிவித்துள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் பிளவு - பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு : என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் துவங்கியும் பிரச்சாரம் சூடு பிடிக்காமல் உள்ளது.

இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி ஆகியவற்றின் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு பிரச்சனை கூட்டனியை பிளக்கும் அளவுக்குச் சென்றுள்ளது. குறிப்பாக, பா.ஜ.க கூட்டணியில் அங்கமாக உள்ள ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிக இடங்களைக் கேட்டது. அதனை வழங்க இரண்டு கட்சிகளும் மறுத்துவிட்டன.

நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 122 இடங்களிலும், பா.ஜ.க 121 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிடப் போவதாக எல்.ஜெ.பி அறிவித்துள்ளது.

பா.ஜ.க கூட்டணியில் பிளவு - பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி தனியாகப் போட்டியிட முடிவு : என்ன காரணம்?

இன்று நடைபெற்ற அந்தக் கட்சியின் அரசியல் விவகார குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அதன் தலைவர் சிராக்பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories