இந்தியா

இந்தியா கேட் முன்பு டிராக்டரை எரித்து விவசாயிகள் போராட்டம் : வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

வேளாண் மசோதாக்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் நாடு தழுவிய போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதற்கு மத்தியில் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியா கேட் முன்பு டிராக்டரை எரித்து விவசாயிகள் போராட்டம் : வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வேளாண் மசோதாக்களை அமல்படுத்தக்கூடாது என்அ வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வந்தனர். இதற்கு மத்தியில் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

தற்போது இந்தியா முழுவதும் விவசாயிகளின் நடத்தி வரும் போராட்டம் இந்த சர்ச்சைக்குரிய மூன்று வேளான் மசோதாக்களுக்கு தான்;

1. வேளான் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவிப்பு மற்றும் வசதி ) மசோதா, 2020.

2.விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு ) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, 2020.

3.அத்தியாவசிய பொருட்கள் சந்தை படுத்துதல் ( திருத்தம் செய்யப்பட்ட) மசோதா, 2020.

இந்த சட்டங்களால் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு உள்ளது என்றும், இந்த சட்டத்தால் குறைந்தபட்ச ஆதார விலை கூட விவசாயிகளுக்குக் கிடைக்காது என்றும் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை தலைநகர் டெல்லியில் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களின்போது, டெல்லியின் இந்தியா கேட்டில் இன்று (திங்கட்கிழமை) காலை ஒரு டிராக்டர் எரிக்கப்பட்டது. அங்கு வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது 15-20 பஞ்சாப் இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்கள் டிராக்டருக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தையடுத்து இரண்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.

இந்தியா கேட் முன்பு டிராக்டரை எரித்து விவசாயிகள் போராட்டம் : வேளாண் மசோதாக்களுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
PC

இந்தநிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்த எங்கள் கட்சி திட்டமிட்டுள்ளதால், அதன் உறுப்பினர்களான நாங்கள் குழுவாக ராஜ்பாத்தில் ஒரு டிராக்டருக்கு தீ வைத்ததாகக் காங்கிரஸின் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

"எங்கள் நாடு எங்கள் விவசாயிகளின் இரத்தத்திலும் வியர்வையிலும் வளர்கிறது. ஆங்கிலேயர்களுடன் போராடுவது முதல் முழு நாட்டிற்கும் உணவளிப்பது வரை, எங்கள் விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங்கின் பிறந்தநாளன்று இளைஞர் காங்கிரஸ் அரசின் விவசாய விரோத மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு டிராக்டரை தீ வைத்துக் கொளுத்தியது ” என்று இளைஞர் காங்கிரஸின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பேரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிப்பதாகவும் இந்த தீ விபத்தால் யாருக்கும் காயம் இல்லை என்றும் டெல்லி போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories