இந்தியா

நேருவின் கொள்கைகள், குஜராத் கலவரம் உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் - திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க!

கொரோனா தொற்றுச் சூழலில் மாணவர்களின் சுமையைக் குறைப்பதாகக் கூறி பா.ஜ.கவுக்கு உவப்பில்லாத பாடங்களை முழுமையாக அழித்தொழிக்கும் வேலையைச் செய்துள்ளது அசாம் மாநில அரசு.

நேருவின் கொள்கைகள், குஜராத் கலவரம் உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் - திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கொரோனா பேரிடர் சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாடச் சுமையைக் குறைக்கவேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு வரைமுறைகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர்களும், மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க அரசு மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்கிறோம் என்ற பெயரில் 12ம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து பா.ஜ.கவுக்கு பிடிக்காத சில பாடங்களை நீக்கியுள்ளது.

நாட்டுக்காக உழைத்த தலைவர்களை இருட்டடிப்பு செய்து, ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்களை முன்னிறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் பா.ஜ.க அரசு, பள்ளி மாணவர்களிடமும் தங்கள் கொள்கைகளை மட்டும் கொண்டு சேர்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.

அதன்படி, அரசியல் விஞ்ஞான பாடத்தில் இந்தியாவின் முதல் பிரதமரும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தவருமான ஜவஹர்லால் நேருவின் தேசக்கட்டுமானம் பற்றிய அணுகுமுறை குறித்த பாடம், அயலுறவு கொள்கை பாடம், நேருவுக்குப் பிறகான ஆட்சி உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் குறித்த பாடம், அயோத்தி விவகாரம், குஜராத் கலவரம், 5 ஆண்டுத்திட்டங்கள் குறித்த பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

நேருவின் கொள்கைகள், குஜராத் கலவரம் உள்ளிட்ட பாடங்கள் நீக்கம் - திட்டமிட்டு காய்நகர்த்தும் பா.ஜ.க!

1986 தேசியக் கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள், பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல் குறித்த பாடங்கள் உள்ளிட்டவை முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

சமூகவியல் பாடத்தில், பெண்களுக்கு சம உரிமை, சிறுபான்மையினர் உரிமைகள், பஞ்சாய்த்து ராஜ், சமூக மாற்றம், நிலசீர்த்திருத்தம், பழங்குடி இயக்கங்கள், முகலாயர்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மதச்சார்பின்மை, குடும்பம், உறவு, வட இந்தியாவில் மதம், சாதி, காலனியாதிக்கம், மற்றும் வகுப்புகள் குறித்த பாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், சமூக அதிகாரம், மக்கள் தொகை, சுற்றுச்சூழல், அரசு வருவாயில் குறைபாடு, அந்நிய செலாவணி, வங்கிகளை தேசியமயமாக்கல், ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுச் சூழலில் மாணவர்களின் சுமையைக் குறைப்பதாகக் கூறி பா.ஜ.கவுக்கு உவப்பில்லாத பாடங்களை முழுமையாக அழித்தொழிக்கும் வேலையைச் செய்துள்ள அசாம் மாநில அரசுக்கு எதிராக கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

banner

Related Stories

Related Stories