இந்தியா

“ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; 1,130 பேர் பலி” : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 86,961 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

“ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; 1,130 பேர் பலி” : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை தாண்டியது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 31,240,113 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 965,066 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதேப்போல், உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 7,004,768 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 204,118 பேர் பலியாகினர்.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 86,961பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,87,581 ஆக உயர்ந்திருக்கிறது.

“ஒரே நாளில் 86,961 பேர் பாதிப்பு; 1,130 பேர் பலி” : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 54.87 லட்சத்தை தாண்டியது!

ஒரே நாளில் 1,130 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 87,882 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 93,356 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில், 43,96,399 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 10,03,299 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 80.12% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.60% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 18.28% ஆக குறைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories