இந்தியா

1 லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,132 பேர் பலி.. கோட்டை விட்ட மோடி அரசு!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

1 லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,132 பேர் பலி..  கோட்டை விட்ட மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 97 ஆயிரத்து 894 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 51 லட்சத்து 18 ஆயிரத்து 254 ஆக உயர்ந்திருக்கிறது.

ஒரே நாளில் 1,132 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து இதுகாறும் 83 ஆயிரத்து 198 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள். மேலும், ஒரே நாளில் 82 ஆயிரத்து 719 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதுவரையில், 40 லட்சத்து 25 ஆயிரத்து 79 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, 10 லட்சத்து 9,976 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

1 லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,132 பேர் பலி..  கோட்டை விட்ட மோடி அரசு!

முன்னதாக, இந்தியாவில் 6 கோடியே 5 லட்சத்து 65 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டுமே 11 லட்சத்து 36 ஆயிரத்து 613 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டிருக்கிறது என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகளை 4 மாதங்களுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால் தினந்தோறும் ஆயிரமாயிரம் பேரை கொரோனாவுக்கு இரையாகியிருக்க மாட்டார்கள் என மத்திய மோடி அரசின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories