சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி-மெங் யான், கொரோனா வைரஸ் வுஹானில் சீன அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
வுஹானில் நிமோனியா குறித்த தனது விசாரணையின் போது அவர் கூறியதாவது,
கொரோனா வைரசைப் பற்றித் தெரிந்துகொண்டதாகவும், இதையடுத்து அவர் கொரோனா வைரஸ் முதலில் கண்டறிந்த போது உலக சுகாதார அமைப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார். உலகம் எதிர்கொள்ளவிருக்கும் ஆபத்தை அறிந்திருந்தாலும் சீன அதிகாரிகள் அவரது எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் "யாரும் பதிலளிக்கவில்லை, மக்கள் அரசாங்கத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்கள், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் அதிக நன்மைகளைப் பெறுவதற்கும் அரசாங்கத்துடனும் உலக சுகாதார அமைப்பினருடனும் ஒத்துழைக்க அவர்கள் காத்திருக்கிறார்கள், ஆனால் இது எல்லாவற்றையும் விட அவசரமானது" என டாக்டர் லி-மெங் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது, சீனப் புத்தாண்டு சமயத்தில், ’சீனாவிலிருந்து உலகம் முழுவதற்கும் மிகப் பெரிய அளவில் மக்கள் பயணம் செய்தனர். அந்த நிலையில் எனக்குத் தெரிந்த உன்மை , "இது ஒரு மிகவும் சர்ச்சைக்குரிய ஆபத்தான வைரஸ்" அதாவது, இது மனிதர்கள் மற்றும் உலக ஆரோக்கியத்தைப் பற்றியது என்பதால் அமைதியாக இருப்பதைத் தவறு என்று அவர் முடிவு செய்ததாகக் கூறியுள்ளார்’
இதனால் டாக்டர் லி-மெங் பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் அது பயமாக இருக்கிறது என்று கூறினார், ஆனால் "நான் உண்மையை உலகுக்குச் சொல்லவில்லை என்றால் நான் வருத்தப்படுவேன் என்று எனக்குத் தெரியும்." என்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஐடிவியில் தோன்றிய டாக்டர் லி, வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.
”மரபணு வரிசை ஒரு மனித கைரேகை போன்றது இதன் அடிப்படையில் நீங்கள் இந்த விஷயங்களை அடையாளம் காணலாம்” என்றும் சீனாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து இது ஏன் வந்தது, எதற்கு இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என்று மக்களுக்குச் சொல்ல நான் தகுந்த ஆதாரங்களைப் பயன்படுத்துவேன் என்று சீன டாக்டர் லி-மெங் உலகிற்குச் சொல்லியுள்ளார்.