இந்தியா

“காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும்”: முன்னணி தலைவர்கள் கடிதம் - நாளை கூடுகிறது காரியகமிட்டி!

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். 23 முன்னணி தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

“காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும்”: முன்னணி தலைவர்கள் கடிதம் - நாளை கூடுகிறது காரியகமிட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பொருப்பேற்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்தாண்டு ராகுல்காந்தி அறிவித்திருந்தார். ராகுல்காந்தி, விலகியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது, ஓராண்டு முடிந்த நிலையில் கட்சிக்கு நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்பட ஆறு முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும் என்று குலாம் நபிஆசாத், ஆனந்த் சர்மா, வீரப்பமொய்லி, முகுல்வாஸ்னிக், சசி தரூர் உள்ளிட்ட 23 முக்கிய தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அந்த கடித்ததில், காரிய கமிட்டி முதல் மாவட்டத் தலைவர்கள் வரை அனைத்து பொருப்புக்களுக்கும் தேர்தல்களை நடத்த வேண்டும். கட்சியை வழிநடத்த ஆலோசனைக் குழு அமைக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு எதிராக செயல்பட ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேசிய அளவில் கூட்டணி அமைக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்களை முடிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

“காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும்”: முன்னணி தலைவர்கள் கடிதம் - நாளை கூடுகிறது காரியகமிட்டி!

இதனையடுத்து நாளை நடைபெறும் கூட்டத்தில் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. அதுவரை சோனியாகாந்தி தலைவராகத் தொடர ஒப்புதல் வழங்குவதா, இல்லை புதிய இடைக்கால தலைவரை நியமிப்பதா என்பதும் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories