இந்தியா

“முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு ஊக்கமளிக்கிறார்”: அங்கி தாஸ்க்கு எதிராக Facebook ஊழியர்கள் போர்க்கொடி!

முகநூல் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் அங்கி தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகநூல் ஊழியர்கள் மத்தியிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

“முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு ஊக்கமளிக்கிறார்”: அங்கி தாஸ்க்கு எதிராக Facebook ஊழியர்கள் போர்க்கொடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக இருப்பவர் அங்கி தாஸ். இவர், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்; அவர்களின் மத அடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரத்திற்கு துணைபோனார் என்பதை அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைகடந்த வாரம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களுடன் அங்கி தாஸூக்கு இருக்கும் நெருக்கமும் வெளிச்சத்திற்கு வந்தது. இது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முகநூல் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கும் அங்கி தாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகநூல் ஊழியர்கள் மத்தியிலும் கோரிக்கை எழுந்துள்ளது.

“முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு ஊக்கமளிக்கிறார்”: அங்கி தாஸ்க்கு எதிராக Facebook ஊழியர்கள் போர்க்கொடி!

இதனையடுத்து 11 ஊழியர்கள் இணைந்து, இந்த விவகாரம் தொடர்பாக முகநூல் நிறுவன தலைமைக்கு, கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடித்தில், “அங்கி தாஸ் தலைமையில் செயல்படும் முகநூல் நிறுவனத்தின் இந்தியக் குழு- முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு ஊக்கமளித்தது தொடர்பாக, சில கடினமான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க வேண்டும்.

மேலும், முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கொள்கை வகுப்பு குழுவில், பலதரப்புப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், முஸ்லிம் மத விரோதப் போக்கை கைவிட்டு, அதிகளவிலான கொள்கை நிலைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories