இந்தியா

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டுகொள்ளாத Facebook: மதவெறி பிரச்சாரத்துக்கு துணைபோவது அம்பலம்!

பா.ஜ.க தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளை பேஸ்புக் கண்டுகொள்ளாமல் செயல்படுவதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் என்ற பத்திரிக்கை குற்றம் சாடியுள்ளது.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டுகொள்ளாத Facebook: மதவெறி பிரச்சாரத்துக்கு துணைபோவது அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் கூட பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் மீது நடக்கும் தாக்குதல் தொடர்கிறது.

இதனைத் தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் மறைமுகமாகவோ, நேரடியாகவோ ஈடுபடுகின்றனர். குறிப்பாக, சிறுபான்மை எதிராக பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக எடுத்துச் செல்கின்றனர்.

மக்களிடையே சிறுபான்மை மக்களை புறக்கணிக்கும் வகையில், அவதூறுகளையும், வன்முறைக் கருத்துக்களையும் பேசி திரிக்கின்றனர். வெகுமக்களிடம் பிரிவினைவாதத்தை உண்டாக்கும் வகையில், இஸ்லாமியர்கள் பற்றி முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் வெறுக்கத்தக்க பேச்சை பதிவிட்டு வருகின்றனர்.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டுகொள்ளாத Facebook: மதவெறி பிரச்சாரத்துக்கு துணைபோவது அம்பலம்!

இதுபோன்ற இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பிரிவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்துவரும் பா.ஜ.க கட்சி தலைவர்களின் முகநூல் பக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வழுத்து வருகின்றது. அதேநேரத்தில், பா.ஜ.க தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்ளவில்லை என வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கூறியுள்ளது.

குறிப்பாக, பா.ஜ.க தலைவர் டி.ராஜா சிங், ரோஹிங்கியா முஸ்லிம்களாக குடியேறியவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். முஸ்லிம்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட வேண்டும். அவர்களின் மசூதிகளை இடிக்கவேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மற்றும் பொதுமேடைகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுக்கத்த பேச்சுக்களை பேசி அச்சுறுத்தி வந்தார்.

ஆனால், படுமோசமான பிரிவினை வாத பேச்சுக்களை பேசும் தெலுங்கான பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங் பேச்சு பதிவுகளையும், அவரது முகநூல் கணக்கை நீக்க பேஸ்புக் நிறுவனம் தவறிதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (Wall Street Journal) குற்றம் சாட்டியுள்ளது.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டுகொள்ளாத Facebook: மதவெறி பிரச்சாரத்துக்கு துணைபோவது அம்பலம்!

இதுதொடர்பாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், பேஸ்புக் நிர்வாகத்தின் உயர்மட்ட கொள்கை நிர்வாகியான அங்கி தாஸ் என்பவர் டி ராஜா சிங் உள்ளிட்ட 3 பா.ஜ.க கட்சி தலைவர்களின் மோசமான கருத்துக்களை நீக்காமல் விட்டுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தெலுங்கானா பா.ஜ.க-வின் சட்டமன்ற உறுப்பினரான டி. ராஜா சிங், முஸ்லிம் மக்களுக்கு எதிர்ப்பு சொல்லாட்சிக்கு பெயர் பெற்றவர். வலதுசாரி சிந்தனையுடை ராஜா சிங், ரோஹிங்கியா முஸ்லிம்களாக குடியேறியவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும், முஸ்லிம்கள் துரோகிகள் என்று அழைக்கப்பட வேண்டும், அவர்களின் மசூதிகளை இடிக்கவேண்டும் என பேஸ்புக் பதிவுகள் மற்றும் பொதுமேடைகளில் பேசினார்.

அப்போது அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. கடந்த மார்ச் மாதத்தில், தெலுங்கான சைபர் கிரைம் உயர் காவல்துறை அதிகாரிகளே, ராஜா சிங் முகநூல் பதிவையும், கணக்கையும் முடக்கவேண்டும் என பேஸ்புக் நிறுவத்தினடம் பரிந்துரைந்தனர். ஆனால், ராஜா சிங் பக்கத்தை பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்வதால் ராஜா சிங் மீது நடவடிக்கை எடுக்க அங்கி தாஸ் மறுத்துவிட்டார் என அந்த அறிக்கை கூறியுள்ளது.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டுகொள்ளாத Facebook: மதவெறி பிரச்சாரத்துக்கு துணைபோவது அம்பலம்!

அதேப்போல், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் அனந்த்குமார் ஹெக்டே தனது பேஸ்புக் பதிவில், "கொரோனா ஜிஹாத்" என்ற சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். முஸ்லிம்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரப்புவதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

மார்ச் மாதத்தில், இந்த வைரஸ் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியபோது, ​​பா.ஜ.க மற்றும் ஊடகங்களின் ஒரு குறிப்பிடத்தக்க வலதுசாரி பிரச்சாரம் தப்லிகி ஜமாஅத் என்ற முஸ்லீம் மிஷ்னரி இயக்கம் கோவிட் -19 ஐ பரப்பியதாக குற்றம் சாட்டினர்கள்.

அதனையடுத்து பா.ஜ.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஸ்ரா, சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வீடியோ ஒன்று வெளிவந்தது. மிஸ்ராவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி சில மணி நேரங்களிலேயே, புதுதில்லியில் மத வன்முறை வெடித்தது, இதில் 53 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளைக் கண்டுகொள்ளாத Facebook: மதவெறி பிரச்சாரத்துக்கு துணைபோவது அம்பலம்!

இப்படி பா.ஜ.கவினரின் வன்முறை பேச்சுக்களை பேஸ்புக் கண்டிக்கத்தவரியதாகவும், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் புறக்கணிப்பதாகவும் அந்த அறிக்க சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், கடந்த ஜூன் மாதம் வுன்ஹால் கூட்டத்தில் ஊழியர்களிடம் பேசிய, பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் மிஸ்ராவின் பெயரை குறிப்பிடாமல், “ஒரு அரசியல்வாதியிடமிருந்து வரும் வன்முறை பேச்சுக்களை அனுமதிப்பதில்லை” என்று கூறிதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் கூட பெங்களூர் கலரத்திற்கு பேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்தே காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே பேஸ்புக் நிறுவனம் வன்முறை பேச்சுகளை நீக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories