இந்தியா

GDP 5% கீழ் சரியும் : சுதந்திர இந்தியாவில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி - இன்ஃபோசிஸ் நிறுவனர் வார்னிங்!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்தால் அதற்கு காரணமாக மோடியாக மட்டுமே சாத்தியமாகும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியமைத்ததில் இருந்தே நாட்டின் பொருளாதார நிலை மந்தமாக இருந்து வருகிறது. அதற்கு பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளான பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகளே முக்கிய காரணமாக உள்ளது.

இப்படி இருக்கையில் இரண்டாவது முறையாக பதவியேற்ற நேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொருளாதாரம் முடங்கியது போன்று இந்தியாவிலும் கடுமையான நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே இருந்த பொருளாதார சரிவையே சீர்படுத்த தெரியாமல் மத்திய மோடி அரசு திணறி வரும் நிலையில் பெருந்தொற்றால் ஏற்பட்ட சிக்கலையும் தீர்க்க வழி தெரியாமல் பொய்யான அர்த்தமற்ற திட்டங்களை அறிவித்து மக்களை மேன்மேலும் ஏமாற்றுவதையே திறம்பட கையாண்டு வருகிறது மத்திய அரசு.

GDP 5% கீழ் சரியும் : சுதந்திர இந்தியாவில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி - இன்ஃபோசிஸ் நிறுவனர் வார்னிங்!

ஏற்றுமதி இறக்குமதிக்கும் வழியில்லாத நிலை ஏற்பட்டதுடன் உள்நாட்டு வர்த்தகமும் படு குழிக்குச் செல்லும் வகையில் அமைந்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள பல்வேறு தொழில் துறைகள் கடுமையாக பொருளாதார இன்னல்களை சந்தித்து வருகின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்தே மீள முடியாமல் அவதியுற்றிருக்கும் நிலையில் கொரோனாவும் கூடவே தொற்றிக்கொண்டு தொழிலாளர்கள், வியாபாரிகள் மீது எண்ணெய்யை ஊற்றி வருகிறது.

இப்படி இருக்கையில், பிரபல ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர நாராயண மூர்த்தி இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதில், முன்னெப்போது இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 5 சதவிகித வீழ்ச்சியை சந்திக்கும் நிலை உண்டாகியுள்ளது. இது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து நிகழாத சம்பவமாகும். ஆகவே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

அதேச்சமயத்தில் மக்களும் இந்த நெருக்கடிகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.

இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் கீழ் சரியுமேயாயின் அது மோடியால் மட்டுமே முடியும் எனவும் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories