இந்தியா

கொரோனாவால் மேன்மேலும் GDP வீழ்ச்சி.. ரூ.900 கோடி செலவில் நாடாளுமன்றம் கட்ட கங்கணம் கட்டும் மோடி அரசு!

தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால் புதிய கட்டடம் கட்டப்படுவது அவசியம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

Modi
Modi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டடம், அமைச்சக அலுவலகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் என்று புது டெல்லியின் அமைப்பை மாற்றியமைக்க கடந்த ஆண்டு மத்திய அரசு திட்டமிட்டது. தற்போது ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கைவிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால், 900 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட மத்திய அரசு தீவிரமாக அனுமதிகளை வழங்கி வருகிறது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டதில் நீதிமன்றம் கடந்த மாதம் மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

கொரோனாவால் மேன்மேலும் GDP வீழ்ச்சி.. ரூ.900 கோடி செலவில் நாடாளுமன்றம் கட்ட கங்கணம் கட்டும் மோடி அரசு!

இதற்கு தற்போது பதிலளித்துள்ள மத்திய அரசு, தற்போதைய நாடாளுமன்றத்தில் தீ விபத்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் குறைபாடுகள் உள்ளதாக கூறியுள்ளது.

நவீன தீ விபத்து பாதுகாப்பு அம்சங்களை தற்போதைய கட்டிடத்தில் செயல்படுத்த முடியவில்லை. நவீன குளிர்சாதன, மின்சார, ஒலி, ஒளி உபகரணங்களைப் பொருத்த முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டுக்குப் பின் மக்களவையில் உறுப்பினர்களுக்கான இருக்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தற்போது அவை போதுமானதாக இருக்காது என்பதால் புதிய கட்டடம் அவசியம் தேவை என்று பதிலில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories