இந்தியா

“அமெரிக்கா பிரேசிலை விட அதிக பாதிப்பை சந்திக்கும் இந்தியா”: ஒரே நாளில் 60,963 பேர் பாதிப்பு- 834 பேர் பலி

கடந்த 7 நாட்களில் உலகில் உள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 23 % சதவீதம் உள்ளது.

“அமெரிக்கா பிரேசிலை விட அதிக பாதிப்பை சந்திக்கும் இந்தியா”: ஒரே நாளில் 60,963 பேர் பாதிப்பு- 834 பேர் பலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 60,963 புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,29,638 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 834 நபர்கள் பலியாகியுள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 46,091 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,39,599 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைபவர்களின் சதவீதம் 70.37ஆக உள்ளது.

இந்தியாவில் மாநில அளவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 5,35,601 கொரோனா பாஸிட்டிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன. மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 18,360 ஆக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இதுவரை 3,08,649 கேஸ்கள் பதிவாகியுள்ளன. அதில் 5,834 நபர்கள் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“அமெரிக்கா பிரேசிலை விட அதிக பாதிப்பை சந்திக்கும் இந்தியா”: ஒரே நாளில் 60,963 பேர் பாதிப்பு- 834 பேர் பலி

அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்ததாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்த 7 நாட்களில் இந்தியாவில் ஒரு நாளில் கொரோனாவுக்கு பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரேசிலைத் தாண்டும் விதத்தில் இந்தியாவில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் உலகில் உள்ள மொத்த கொரோனா கேஸ் எண்ணிக்கையில் இந்தியாவில் மட்டும் 23 % சதவீதம் உள்ளது. அதே போல் 15 % சதவீத உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

banner

Related Stories

Related Stories