இந்தியா

ஓடுபாதை ஆபத்து குறித்து 9 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நிபுணர் - கண்டுகொள்ளாத விமான போக்குவரத்து துறை?

விமான ஓடுபாதையின் போதாமை குறித்து 9 வருடங்களுக்கு முன்பே கேப்டன் ரங்கநாதன் எச்சரித்துள்ளார்.

ஓடுபாதை ஆபத்து குறித்து 9 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நிபுணர் - கண்டுகொள்ளாத விமான போக்குவரத்து துறை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கரிப்பூர் விமான நிலையம் பாதுகாப்பற்றது மற்றும் தரையிறங்க அங்கு அனுமதிக்கக்கூடாது, முக்கியமாக மழைக்காலங்களில் மிகவும் ஆபத்தானது என்று 9 ஆண்டுகளுக்கு முன்பே, விமான போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு ஆலோசனை கமிட்டியில் இடம்பெற்றிருந்த கேப்டன் மோகன் ரங்கநாதன் என்பவர் எச்சரித்துள்ளார்.

இந்த விமான விபத்து அப்போது விடப்பட்ட எச்சரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டதை காட்டுவதாக உள்ளது. “என்னுடைய எச்சரிக்கை பொருட்படுத்தப்படாமல் இருந்துள்ளது. அது ஒருபக்கம் சரிவுள்ள டேபிள் டாப் ஓடுபாதை” என இதுகுறித்து ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

ஓடுபாதை ஆபத்து குறித்து 9 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த நிபுணர் - கண்டுகொள்ளாத விமான போக்குவரத்து துறை?

மேலும் ”இந்த விமான நிலையத்தின் அமைப்பை வைத்துப் பார்த்தால் விமான ஓடுபாதை முடிந்தபின் உள்ள பகுதியின் (பஃபர் ஸோன்) நீளம் என்பது 240 மீட்டர்களாக இருக்கவேண்டும். ஆனால் 90 மீட்டர்கள் மட்டுமே உள்ளது. அதேபோல் ஓடுபாதையின் இரு பக்கத்திலும் கண்டிப்பாக 100 மீட்டர்கள் இடம் இருக்கவேண்டும். ஆனால் இங்கு 75 மீட்டர்கள் மட்டுமே உள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு மலையின் மீதோ அல்லது மேடான நிலத்தின் மீதோ அமைந்திருக்கும் ஒரு ஓடுபாதை என்பதே டேபிள் டாப் ஓடுபாதை. அந்த ஓடுபாதைகளின் இரு பக்கமும் பள்ளத்தாக்குகளோ சரிவுகளோ இருக்கும்.

கோழிக்கோடு விமான ஓடுதளம்.
கோழிக்கோடு விமான ஓடுதளம்.

டேபிள் டாப் ஓடுபாதைகளில் மழை பெய்யும்போது விமானத்தை தரையிறக்குவதற்கான வழிமுறைகளே இல்லை என ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும் விமான போக்குவரத்துத் துறையின் சமூக விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆலோசனை கமிட்டியின் தலைவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் ”ஓடுபாதை முடிந்த பின் உள்ள பாதுகாப்பு பகுதியின் பற்றாக்குறையாலும், ஓடுபாதை முடிந்தபின் உள்ள இடப்பற்றாக்குறையாலும் ஓடுபாதை எண் 10-ஐ பயன்படுத்துவதை அனுமதிக்கக்கூடாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஒருவேளை விமானத்தை ஓடுபாதை நீளத்துக்குள் நிறுத்த முடியவில்லை என்றாலும் ஓடுபாதையைத் தாண்டியும் கொஞ்சம் இடம் இருக்கவேண்டும். ஆனால் அது இந்த விமான நிலையத்தில் இல்லை என ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஓடுபாதையின் தன்மை குறித்து விமானப்போக்குவரத்துத் துறையின் இயக்குநர் ஜெனரலுக்கும் அவரது குழுவுக்கும் முன்பே தெரியும் என்றும் அவர்கள் இதிலிருந்த ஆபத்தை உணர்ந்தார்களா என்றும் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories