இந்தியா

“பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செய்யவேண்டும்”: தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்!

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செய்யவேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

“பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செய்யவேண்டும்”: தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பணியாளர்துறைக்கு கடந்த மாதம் முன்னாள் தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிமாக சொத்து சேர்த்திருப்பதாக அவர்மீது விசாரணை நடத்த வேண்டும் என குற்றச்சாட்டு சென்றுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழக தலைமை செயலாளருக்கு பீலா ராஜேஷ் சொத்து குவிப்பு மீது விசாரணை நடத்த மத்திய பணியாளர் துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஏற்கனவே தமிழக சுகாதார துறை செயலாளராக இருந்த போது இவர் மீது பல ஊழல் குற்றசாட்டு இருந்து வந்ததால் சுகாதார துறை செயலாளர் பதவியில் மாற்றப்பட்டார்.

சென்னை புறநகர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ளா சொகுசு பங்களா கட்டியாதகவும், கொரோனா காலத்தில் பல டென்டர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் ஊழல் என பல குற்றாசாட்டுகள் எழுந்தனர்.

“பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செய்யவேண்டும்”: தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம்!

இந்நிலையில், தற்போது சொத்து குவிப்பு விசாரணை நடத்த தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த வழக்கை மத்திய அரசு விசாரிக்கத் தொடங்கினால் அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் ஊழல் வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீலா ராஜேஷ் மீது சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செய்யவேண்டும் என தமிழக தலைமை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories