இந்தியா

“சுதந்திர தின நிகழ்ச்சிகளை சமூக இடைவெளி, கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும்” : மத்திய அரசு உத்தரவு!

சுதந்திர தின கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளை சமூக இடை வெளியுடன் நடத்த வேண்டும். அதிகமாக மக்கள் கூடுவதை தவிற்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

“சுதந்திர தின நிகழ்ச்சிகளை சமூக இடைவெளி, 
 கட்டுப்பாடுகளுடன் நடத்த வேண்டும்” : மத்திய அரசு உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
premjourn
Updated on

டெல்லியில் வழக்கமான நடைமுறைப் படி செங்கோட்டையில் பிரதமர் கொடி ஏற்றி அணிவகுப்பு மறியாதையை ஏற்றுக்கொள்வார். பின்னர் உரையாற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. செங்கோட்டையில் சமூக இடைவெளியுடன் ஏற்பாடுகள் செய்யப்படும்.

அதேபோல் மாநில தலைநகரங்களிலும், மாவட்டங்களிலும் சமூக இடைவெளியுடன் சுதந்திர தின நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுள்ளது.

இந்த முறை நிகச்சிகளுக்கு கொரோனா சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களையும் அழைக்கலாம் என்றும் மத்தி அரசு கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories