இந்தியா

“கொரோனா அச்சம்; நோயாளிகள் அடுத்தடுத்து தற்கொலை”: திண்டுக்கல்லில் ட்ரான்ஸ்பார்மர் மீது ஏறி நோயாளி தற்கொலை!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி மின்சார ட்ரான்ஸ்பாரம் ஏறி தற்கொலை செய்துக்கொண்டார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மீனாட்சி பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக பொது மருத்துவ பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், தனக்கு ஒரு வாரகாலமாக காய்ச்சல் நீடிப்பதால் அச்சமடைந்த அழகர்சாமி இன்று அதிகாலை 5 மணியளவில் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பித்து கல்லறை தோட்டம் அருகே உள்ள உயர் அழுத்த மின்சார டிரான்ஸ்பார்மரில் ஏரி உயர் அழுத்த மின் வயரை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

இதனை அறிந்த வடக்கு காவல் நிலைய போலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று மின்சார ஊழியர்கள் வரவழைத்து அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் துண்டிப்பு ஏற்படுத்தி பின்பு உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக சென்னை, திருச்சி போன்ற மாவட்டங்களில் சிகிச்சையின் போது நோயாளிகள் பலர் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டனர். இதுபோல நோயாளிகளின் தற்கொலையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories