இந்தியா

“தனிமை முகாமில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொரோனா நோயாளி” : மும்பையில் நடந்த கொடூரம்!

மும்பை தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த பெண்ணை கொரோனா நோயாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தனிமை முகாமில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொரோனா நோயாளி” : மும்பையில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் இருந்து வருகிறது. இதனால் தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், மும்பையில் உள்ள நகராட்சி பராமரிப்பில் உள்ள குடியிருப்பில் கொரோனா தனிமைப்படுத்தல் மையம் அமைப்பக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒவ்வொரு நோயாளிகளுக்கு தனி தனி அறை ஒதுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி 40 வயதான பெண் ஒருவர் நோய் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்ட அதே குடியிருப்பில் கொரோனா நோயாளி ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே அடிக்கடி உதவி செய்வது போல அந்த நபர் பெண்ணிடம் வந்து பேச்சுக் கொடுத்துள்ளார்.

“தனிமை முகாமில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொரோனா நோயாளி” : மும்பையில் நடந்த கொடூரம்!

இதனால் சந்தேகம் அடைந்த பெண் அந்த நோயாளியிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொரோனா நோயாளி, அந்த பெண் தனியாக இருக்கும் நேரத்தில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பன்வேல் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories