இந்தியா

“செப்டம்பரில் கொரோனா பாதிப்பு 35 லட்சமாகும்; தமிழகத்தில் 6,300 பேர் பலியாகுவார்கள்” : ஐ.ஐ.எஸ்.சி கணிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதுள்ள நிலைமையைவிட மோசமானால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என ஐ.ஐ.எஸ்.சி கணித்துள்ளது.

“செப்டம்பரில் கொரோனா பாதிப்பு 35 லட்சமாகும்; தமிழகத்தில் 6,300 பேர் பலியாகுவார்கள்” : ஐ.ஐ.எஸ்.சி கணிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தற்போதைய நிலை நீடித்தால் செப்டம்பர் மாதத்துக்குள் 35 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என பெங்களூருவில் இந்திய அறிவியல் நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.சி) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐ.ஐ.சி.எஸ் நிறுவனத்தின் பேராசிரியர்கள் ஜி.சசிக்குமார், தீபக் ஆகியோரின் குழுவினர் தற்போது நாட்டில் மாநிலந்தோறும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்தும், எதிர்காலத்தில் பரிசோதனையை அதிகப்படுத்தினால் இருக்கும் நிலை குறித்தும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், நாட்டில் கொரோனாவுக்குச் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கும். இவர்களில் கர்நாடகத்தில் மட்டும் 71,300 பேர் சிகிச்சையில் இருப்பார்கள். இப்போது தொடரும் நிலையைவிட முன்னேற்றம் காணப்பட்டால் செப்டம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 4.5 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 88 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

“செப்டம்பரில் கொரோனா பாதிப்பு 35 லட்சமாகும்; தமிழகத்தில் 6,300 பேர் பலியாகுவார்கள்” : ஐ.ஐ.எஸ்.சி கணிப்பு!
ஐ.ஐ.எஸ்.சி

மேலும், நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையைவிட மோசமாக மாறினால், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்தால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 6.30 லட்சம், டெல்லியில் 2.40 லட்சம், தமிழகத்தில் 1.60 லட்சம், குஜராத்தில் 1.80 லட்சம் அதிகரிக்கலாம்.

நவம்பர் 1-ம் தேதிக்குள் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 7.20 லட்சமாக அதிகரிக்கும், 30,400 பேர் உயிரிழக்க நேரிடும் என்றும், 2021-ஆம்ஆண்டு ஜனவரிக்குள் 10.80 லட்சம் பேர் பாதிக்கப்படலாம், அதில் 78,900 பேர் உயிரிழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக உயிரிழப்பைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதத்துக்குள் 1.40 லட்சமாக அதிகரிக்கலாம். இதில் மகாராஷ்டிராவில் 25 ஆயிரம் பேர், டெல்லியில் 9,700 பேரும் , கர்நாடகாவில் 8,500 பேரும், தமிழகத்தில் 6,300 பேரும்,குஜராத்தில் 7,300 பேரும் உயிரிழக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

“செப்டம்பரில் கொரோனா பாதிப்பு 35 லட்சமாகும்; தமிழகத்தில் 6,300 பேர் பலியாகுவார்கள்” : ஐ.ஐ.எஸ்.சி கணிப்பு!

கொரோனா இந்தியாவிலும் உலகின் பிறபகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நோயைக் கட்டுப்படுத்த இந்திய அரசு முயற்சித்த போதிலும், 640 மாவட்டங்களில் 627 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, குஜராத், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மற்றும் மத்தியப் பிரதேசம் என இந்த எட்டு மாநிலங்களில், ஐந்து மாநிலங்களில் அதிக ஒட்டுமொத்த பாதிப்பு உள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய ஒன்பது பெரிய மாநிலங்களில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories