இந்தியா

“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்?

வுடி விகாஸ் துபே போலிஸாரால் திட்டமிட்டு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்படுகிறது.

“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்?
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில், போலிஸ் டி.எஸ்.பி உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்படக் காரணமான ரவுடி விகாஸ் துபே போலிஸாரால் திட்டமிட்டு என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக சர்ச்சை உருவாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த ஜூலை 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலிஸாரை ரவுடி விகாஸ் துபே தலைமையிலான கும்பல் சுட்டதில் ஒரு போலிஸ் டி.எஸ்.பி, மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலிஸார் உயிரிழந்தனர்.

இந்தியாவையே அதிரச் செய்த இந்தப் படுகொலைச் சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி விகாஸ் துபே தலைமறைவான நிலையில், அவனது கூட்டாளிகள் 5 பேரை போலிஸார் சுட்டுக்கொன்றனர். சிலர் கைது செய்யப்பட்டனர்.

“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்?

விகாஸ் துபேவை பிடிக்க 40 தனிப்படை போலிஸார் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்யப்பட்ட விகாஸ் துபேவை கான்பூருக்கு அழைத்து வரும் வழியில் என்கவுன்ட்டர் செய்துள்ளனர்.

விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக போலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

“வந்தது ஒரு கார்; விபத்துக்குள்ளானது வேறொரு கார்” - விகாஸ் துபே என்கவுன்டரை திட்டமிட்டு நடத்தியதா போலிஸ்?

ஆனால், இதுதொடர்பான வேறொரு தகவலும் தற்போது பரவி வருகிறது. போலிஸார் திட்டமிட்டே என்கவுன்ட்டர் நடத்தியிருப்பதாக குற்றச்சாட்டப்பட்டு முன்வைக்கப்படுகிறது.

என்கவுன்ட்டர் செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக டாடா சஃபாரி SUV காரில் பயணித்த விகாஸ் துபே, பின்னர் மஹிந்திரா TUV 300 காருக்கு மாற்றப்பட்டது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories