இந்தியா

“இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேர் பாதிப்பு” : சமூகப் பரவல் நிலையை மறைக்கும் மோடி அரசு ?

இந்தியாவில் கடந்த மே மாதத்தின் முதல் வாரத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சமாக இருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

“இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேர் பாதிப்பு” : சமூகப் பரவல் நிலையை மறைக்கும் மோடி அரசு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 7,860,752 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 432,200 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 2,142,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,142,224 பேர் பலியாகினர்.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்ததுள்ளது.

“இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேர் பாதிப்பு” : சமூகப் பரவல் நிலையை மறைக்கும் மோடி அரசு ?

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தாண்டியது. இந்தியாவில் பாதிப்பு மே 19 ம் தேதி ஒரு லட்சத்தை எட்டியது. அதனையடுத்த 15 நாட்களில் ஜுன் 3ம் தேதி இரண்டு லட்சத்தை எட்டிய நிலையில் அடுத்த பத்தே நாட்களில் ஒரு லட்சம் அதிகரித்து தற்போது மூன்று லட்சத்தை எட்டியுள்ளது.

இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 321,626 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,199 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த மே மாதத்தின் முதல் வாரத்திலேயே கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சமாக இருக்கலாம் என அதிர்ச்சிகரமான ஆய்வு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் செரோலாஜிகல் கணக்கெடுப்பின் படி, மே மாத தொடக்கத்தில் கூட இந்த மாவட்டங்களில் 7,00,000 பேர் SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேர் பாதிப்பு” : சமூகப் பரவல் நிலையை மறைக்கும் மோடி அரசு ?

கணக்கெடுப்பில் சுட்டிக்காட்டப்பட்ட எண்ணிக்கை, முழு நாட்டிலும் மே மாத தொடக்கத்தில் பதிவான 35,000 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு வழக்குகளை விட இருபது மடங்கு அதிகமாகும். இது உண்மையான COVID-19 எண்ணிக்கையை ஒட்டுமொத்தமாக குறைந்தது 20 காரணிகளால் குறைத்து மதிப்பிடக்கூடும் என்று கூறுகிறது.

கணக்கெடுப்பின் வழிமுறையை விவரிக்கும் ஐ.சி.எம்.ஆரின் இன்-ஹவுஸ் இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சில் (house Indian Journal of Medical Research) மே மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, 24,000 முதியவர்களின் இரத்த மாதிரிகள் எலிசா சோதனை மூலம் SARS-CoV-2 க்காக குறிப்பாக தயாரிக்கப்பட்ட ஆன்டிபாடிகளுக்கு பரிசோதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், நோயின் தாக்கம் குறைவாக இருந்தால், செரோலாஜிகல் கணக்கெடுப்புகளில் தவறான நேர்மறைகள் பிரதிபலிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நோயின் அதிக மாறுபாடு மற்றும் 7,00,000 நோய்த்தொற்றுகள் உள்ள பிராந்தியங்களில் சமூக பரலை எட்டியிருக்கலாம் என்பதே இந்த கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்த கணக்கெடுப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா நிச்சயமாக சமூகப் பரவல் கட்டத்தில் இல்லை என ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேர் பாதிப்பு” : சமூகப் பரவல் நிலையை மறைக்கும் மோடி அரசு ?

சமீபத்தில் 65 மாவட்டங்களில் 26,400 பேருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்றுப் பரவல் என்பது 0.73 சதவீதம் தான் இருக்கிறது என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்தது.. ஆனால், நிலைமை என்னவோ தலைகீழாக இருக்கிறது. இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 100 எட்டியபின் ஒரு லட்சத்தை எட்ட 64 நாட்கள் ஆனது.

ஆனால் ஒரு லட்சம் எண்ணிக்கையிலிருந்து 2 லட்சத்தை எட்டுவதற்கு 14 நாட்களும், 2 லட்சத்திலிருந்து 3 லட்சத்தை எட்ட 10 நாட்களும் போதுமானதாக இருக்கிறது. இந்நிலையில் சமூக பரலைத் தொடவில்லை என கூறுவது மக்களை ஏமாற்றும் வேளை என சமூக ஆர்வலர்கள் குற்ற சாட்டுகின்றனர்

banner

Related Stories

Related Stories