இந்தியா

10 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது!

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தாண்டியது.

10 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 7,739,424 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 428,336 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 2,116,922 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 116,825 பேர் பலியாகினர்.

இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 5வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவைத் தொடர்ந்து 4-வது இடத்தை பிடித்ததுள்ளது.

10 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு - இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது!

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இந்த மூன்றரை மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சம் தாண்டியது. இந்தியாவில் பாதிப்பு மே 19 ம் தேதி ஒரு லட்சத்தை எட்டியது. அதனையடுத்த 15 நாட்களில் ஜுன் 3ம் தேதி இரண்டு லட்சத்தை எட்டிய நிலையில் அடுத்த பத்தே நாட்களில் ஒரு லட்சம் அதிகரித்து இன்று மூன்று லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 11,458 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது. 386 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளது. இதுவரை, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,08,993 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8,884 ஆக அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி உலக நாடுகளே இந்தியாவின் தடுப்பு நடவடிக்கையை பாராட்டுவதாக சொல்லும் வேலையில், உலகில் மோசமான பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா சென்றிருப்பது பிரதமர் சொன்ன கூற்று பொய் என தெரிவதாக வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனியும் பிரதமர் மோடி தற்பெருமை பேசாமல் நடவடிக்கை எடுப்பாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories