இந்தியா

“மோடி அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவின் ஜிடிபி 4% ஆக குறையும்” - மூடிஸ் அதிர்ச்சி தகவல்!

பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் கொள்கைகளை செயல்படுத்துவது இந்திய அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் மூடிஸ் கணித்துள்ளது. 

“மோடி அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவின் ஜிடிபி 4% ஆக குறையும்” - மூடிஸ் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் விளைவாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளுக்கு கொரோனா பரவல் மட்டுமே காரணம் அல்ல என சர்வதேச பொருளாதார மதிப்பாய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. மாறாக இதற்கு முன்பாகவே ஏற்பட்டிருந்த நெருக்கடிகளின் ஒட்டுமொத்த வெளிப்பாடுதான் என்று மூடிஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“மோடி அரசின் பொருளாதார கொள்கையால் இந்தியாவின் ஜிடிபி 4% ஆக குறையும்” - மூடிஸ் அதிர்ச்சி தகவல்!

பொருளாதார சீர்திருத்தங்களின் தேக்கம் மற்றும் கொள்கைகளை வகுப்பதில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக நீண்ட காலமாக பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்து வருகிறது என குறிப்பிட்டுள்ள மூடிஸ், 2016ம் நிதியாண்டு 8.3 சதவிகிதமாக கணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்த உள்ளாட்டு உற்பத்தி, 2019ம் நிதியாண்டில் 4.2 சதவிகிதமாக குறைந்ததை சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால், நடப்பு நிதியாண்டில் ஜி.டி.பி. 4 சதவிகிதமாக குறையும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார இறையாண்மை மதிப்பீட்டை மிகக் குறைந்த முதலீட்டு தரத்திற்கு குறைத்துள்ள மூடிஸ் நிறுவனம், பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கும் கொள்கைகளை செயல்படுத்துவது இந்திய அரசுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் கணித்துள்ளது.

இது தொடர்பான செய்தியை பகிர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “இந்திய பொருளாதாரத்தை மோடி கையாளும் விதம் குப்பையை விட ஒரு படி மேல் உள்ளது என மூடிஸ் மதிப்பிட்டுள்ளது. ஏழை மக்களுக்கான ஆதரவு அளிக்காத நேரத்தில் இன்னும் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories