இந்தியா

“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி!

“காட்மேன் படத்தின் 2 நிமிட டீசரை வைத்து குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான தொடர் என்ற முடிவுக்கு வருவது தவறு” என டேனியல் பாலாஜி தெரிவித்துள்ளார்.

“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு புதிய படங்கள் மற்றும் வெப் சீரியஸ் போன்றவை ஓடிடி தளத்தில் அதிகமாக வரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் சமீபத்தில் ஜி5 நிறுவனம் காட்மேன்(GodMan) என்ற வெப் சீரியஸ் ஒன்றை வெளியிட்டது. அதன் டீஸர் மே 26ம் தேதி வெளியானது.

அந்த டிஸர் வெளியான சிறிது நேரத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் நடித்துள்ள நடிகர்கள் மீது தற்போது பல்வேறு சர்ச்சைகளும் அவதூறுகளும் எழுந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஜெயப்பிரகாஷ் ஒரு சாமியார் வேடத்தில் நடித்திருக்கிறார். அவரின் கதாப்பாத்த்ல் இருந்து ‘பிராமணர்கள் மட்டும் தான் வேதம் படிக்கவேண்டு என எங்கே கூறப்படுள்ளது’ என ஒரு வசனம் பேசுகிறார். தற்போது அந்த வசனம் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி!

இன்னொரு காட்சியில் நடிகர் டேனியல் பாலாஜி ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் அந்த படத்தில் மது அருந்துவது மற்றும் பெண்களுடன் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே இன்னொரு காட்சியில் சாமியார் வேடத்திலும் டேனியல் பாலாஜி வருகிறார். இதனைப் பிடித்துக்கொண்ட பா.ஜ.க மற்றும் இந்துத்வா கும்பல்கள் இந்த திரைப்படம் பிராமணர்களுக்கு எதிராக இருப்பதாக கூறி பிரச்சனையில் ஈடுபடத் துவங்கியுள்ளன.

இந்த சர்ச்சை அதிகரிக்க துவங்கியதை அடுத்து அந்த டீஸரை ஜி5 நிறுவனம் நீக்கியது. ஆனாலும் அந்த படித்தில் நடித்திருக்கும் டேனியல் பாலாஜிக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் இன்னும் அதிகரித்துள்ளது.

“Godman வெப் சீரிஸ் யாரையும் தவறாக காட்டவில்லை : முன்முடிவுடன் செயல்பட வேண்டாம்” - டேனியல் பாலாஜி பேட்டி!

இந்நிலையில் சமீபத்தில் டேனியல் பாலாஜி அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக போன் கால்கள் வருவதாகவும், போனை எடுத்தவுடன் தன்னைப்பற்றியும், தனது குடும்பத்தினர் பற்றியும் ஆபாச வார்த்தைகளாலும், மோசமான முறையில் திட்டி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் முதலில் தான் ஒரு கிறிஸ்தவன் அல்ல; அது சித்தி நாடகத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் என்றும் அது பின்னர் வழக்கமாகி தனது பெயரான பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டுள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார். சிலர் போனில் மிரட்டும் போது, ‘கிறிஸ்துவனாக இருக்கும் நீ எப்படி எங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தலாம்’ என்ற முறையில் தன்னை மிரட்டுகிறார்கள். மேலும் ஒரு படத்திற்காக இதுபோல நடக்கும் தாக்குதலுக்கு பின்னணியில் சில அமைப்புகள் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அதுமட்டுமின்றி, படத்தின் 2 நிமிட டீசரை வைத்து, குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான தொடர் என்ற முடிவுக்கு வருவது தவறு என்றும் டேனியல் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக paatal lok வெப் சீரியஸுக்கு எதிராகவும் சர்ச்சை எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories