இந்தியா

“புண்ணாகி போன கால்களுக்கு வைத்தியம்” - புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நெகிழ வைத்த சீக்கியர்கள்!

புண்ணாகி போன புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கால்களுக்கு டெல்லி சீக்கியர்கள் வைத்தியம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தனது விஸ்வரூபத்தைக் காட்டி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி நாடுமுழுவதும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.

50 நாட்களுக்கு மேல் ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்னும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி நடைபயணம் நடந்துச் சென்றுக்கொண்டே இருக்கின்றனர். எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

நாடுமுழுவதும் பெருளாதாரத் தேவைக்காக புலம் பெயர்ந்துச் சென்ற தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் நடந்து மீண்டும் தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்த செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

“புண்ணாகி போன கால்களுக்கு வைத்தியம்” - புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நெகிழ வைத்த சீக்கியர்கள்!

கடந்த மார்ச் 24ம் தேதியில் நடந்து சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுவரை அதாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்திலிருந்து நேற்று வரை மொத்தம் 208 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து செல்லும்போது ஏற்பட்ட விபத்துகள் மற்றும் மருத்துவ அவசர நிலைகளின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பலரும் செல்லும் வழியில் கால்களில் காயம் ஏற்பட்டு புண்ணாகி ரத்தம் சொட்ட சொட்ட நடந்த சோக சம்பவங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாக வெளியானது. இந்நிலையில் பல நூறு கிலோமீட்டர் தூரம் நடந்து புண்ணாகி போன புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் கால்களுக்கு சீக்கியர் வைத்தியம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது.

நாட்டில் பல்வேறு பகுதிக்கு நடந்துச் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் கால் காயங்களுக்கு வைத்தியம் பார்க்க டெல்லியில் உள்ள சீக்கியர்கள் முடிவு எடுத்து சாலையோரம் அமர்ந்து காயம் பட்டவர்களுக்கு முதலுதவி சிக்கிச்சை மற்றும் உணவு வழங்கி வருகின்றனர்.

“புண்ணாகி போன கால்களுக்கு வைத்தியம்” - புலம் பெயர்ந்த தொழிலாளர்களை நெகிழ வைத்த சீக்கியர்கள்!

அதன்படி டெல்லி சுற்றுப்புற மாநிலங்களில் சீக்கிய குருதுவாரா மக்கள் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு சமைத்து உணவு வழங்குவதோடு தற்போது வைத்தியமும் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இத்தகைய முயற்சிக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories