இந்தியா

தென் கொரியாவைப் பார்த்தாவது பாடம் கற்குமா இந்தியா? - ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாகும்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பது மேலும் தொற்று பாதிப்பை அதிகரிக்கும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென் கொரியாவைப் பார்த்தாவது பாடம் கற்குமா இந்தியா? - ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாகும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸை மிகவும் சாதூர்யமாகக் கையாண்டதாக ஐ.நா முதல் உலக நாடுகள் வரை பாராட்டு பெற்ற நாடு தென் கொரியா.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று இரண்டாவதாக பரவத்தொடங்கிய நாடே தென் கொரியாதான். ஆரம்ப காலகட்டத்தில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்த தென் கொரியா, பின்னர் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுவந்தது. பாதிப்பில் மீள அந்நாட்டு அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளும் திட்டமுமே காரணம்.

குறிப்பாக, தென் கொரியா முழுவதும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, நாடுமுழுவதும் உள்ள மக்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு அப்படி பாதிப்பு கண்டறியப்பட்டவர்களுக்கு அரசு தீவிர சிகிச்சை அளித்து வந்தது. உதாரணமாக 10 ஆயிரம் பேரில் 8 ஆயிரம் பேருக்கு சோதனை செய்தது.

தென் கொரியாவைப் பார்த்தாவது பாடம் கற்குமா இந்தியா? - ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாகும்!

அதாவது நாட்டில் உள்ள பெரும்பாலன மக்களுக்கு சோதனை செய்து முன்கூட்டியே பாதிப்பைக் கண்டறிந்தது. தென்கொரியாவில் இருந்துவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,050, இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆகும். இதுவரை சிகிச்சையில் இருந்து 9,888 குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

தென் கொரியா கொரொனாவை கட்டுப்படுத்தியதற்கு தொடர்ந்து கொண்டுவரப்பட்ட ஊரடங்கு, பல கட்ட சோதனை, அதிக அளவிலான சோதனை மற்றும் மக்கள் ஒத்துழைப்பு போன்றவற்றால் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தென் கொரியாவின் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டியது. வைரஸை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் தென் கொரியாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு புகழாரம் சூட்டியது.

தென் கொரியாவைப் பார்த்தாவது பாடம் கற்குமா இந்தியா? - ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாகும்!

இந்நிலையில் ஊரடங்கு தென் கொரியாவில் தளர்த்தப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியது. தொற்று அறிகுறிகளே இல்லாமல் குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

குறிப்பாக, டாயிகு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 91 பேரும் குணமடைந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்களை பரிசோதித்த போது, அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்து அனைவரையும் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொற்று அறிகுறிகளே இல்லாமல் குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் அறிகுறி இல்லாத பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தென் கொரியாவைப் பார்த்தாவது பாடம் கற்குமா இந்தியா? - ஊரடங்கு தளர்வால் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாகும்!

அந்நாட்டின் ஊரடங்கு தளர்த்தப்பட்டதே இந்த பாதிப்புக்கு காரணாம் என்று கூறப்படுகிறது. அதிதீவிர முயற்சிகள் எடுத்து கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்திய தென் கொரியா நாட்டிலேயே ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது.

முறையான திட்டமிட்ட மருத்துவ பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்களில் இல்லாத நிலை என அடுக்கிக்கொண்டே போகும் அளவிற்கு இந்தியாவில் கொரோனா தடுப்பு பிரச்சனைகள் உள்ளது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளினால் கொரோனா பாதிப்பு இன்னும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் மட்டும் 4000 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 90 ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மோடி அரசு ஊரடங்கை மட்டும் அறிவித்து விட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories