உலகம்

“உலக நாடுகள் பாராட்டிய தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா” - தளர்வு அறிவிப்பால் ஏற்பட்ட விளைவு!

கொரோனா தடுப்புப் பணியில் உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தென் கொரியாவில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

“உலக நாடுகள் பாராட்டிய தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா” - தளர்வு அறிவிப்பால் ஏற்பட்ட விளைவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸை மிகவும் சாதூர்யமாகக் கையாண்டதாக ஐ.நா முதல் உலக நாடுகள் வரை பாராட்டு பெற்ற நாடு தென் கொரியா.

சீனாவில் கொரோனா பரவல் ஆரம்பித்து பரவத்தொடங்கிய இரண்டாவது நாடே தென் கொரியாதான். ஆரம்ப காலகட்டத்தில் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிப்பை சந்தித்த தென் கொரியா, பின்னர் பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுவந்தது. பாதிப்பில் மீள அந்நாட்டு அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளும் திட்டமுமே காரணம்.

மேலும் சிறந்த திட்டங்கள் மூலமாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு, பல கட்ட சோதனை, அதிக சோதனை மற்றும் மக்கள் ஒத்துழைப்பு போன்றவற்றால் கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அந்நாட்டி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

“உலக நாடுகள் பாராட்டிய தென்கொரியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா” - தளர்வு அறிவிப்பால் ஏற்பட்ட விளைவு!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தென் கொரியாவின் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டியது. வைரஸை கட்டுப்படுத்துவதில் உலக நாடுகள் தென் கொரியாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என ஐ.நா மற்றும் உலக சுகாதார அமைப்பு புகழாரம் சூட்டியது. இந்நிலையில் ஊரடங்கு தென் கொரியாவில் தளர்த்தப்பட்டது.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, மீண்டும் கொரோனா வேகமாகப் பரவத் தொடங்கியது. தொற்று அறிகுறிகளே இல்லாமல் குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல் அறிகுறி இல்லாத பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு ஏற்படுத்தியது.

இந்த நோய்த் தொற்று ஒரே நாளில் அதிகரிக்க அங்குள்ள இரவு கேளிக்கை விடுதிகளே காரணம் கூறப்படுகிறது. அதிலும் தொற்று பாதிக்கப்பட்ட 29 வயது இளைஞர் ஒருவர் தனக்கு பாதிப்பு இருக்குறது என தெரியாமல் ஒருவாரகாலமாக பல கேளிக்கை விடுதிகளுக்குச் சென்றுள்ளார். இவர் சென்ற இடங்களில் 5,500 அதிகமானோர் இருந்துள்ளனர்.

அதில் 100 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்புப் பணியில் உலக நாடுகளுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்த தென் கொரியாவிலேயே கொரோனா தொற்று மீண்டும் வந்துள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories