இந்தியா

“கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டுமாம்” : கையை விரித்த மோடி அரசு ? - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

“கொரோனா வைரஸுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டுமாம்” : கையை விரித்த மோடி அரசு ? - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952ல் இருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, பலியானோர் எண்ணிக்கை 1,783ல் இருந்து 1,886 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3,390 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. கடந்த 24 மணி நேரத்தில் 104 பேர் பலியாகி உள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பால செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 1,273 பேர் கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்துள்ளனர். 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

216 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. 42 மாவட்டங் களில், கடந்த 28 நாட்களில் புதிய நோய்த்தொற்று கண்டறியப்படவில்லை. 29 மாவட்டங்களில், கடந்த 21 நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை, 36 மாவட்டங்களில், கடந்த 14 நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை. 46 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களில் தொற்று கண்டறியப்படவில்லை.

நாம் ஊரடங்கு தளர்வுகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவது பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கொரோனா வைரஸுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறைகளை நாம் வாழ்க்கை முறை மாற்றங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். இது மிகப்பெரிய சவால்தான். மக்கள் தான் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வாலின் இந்த பேட்டி நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கொடிய நோயால் மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்துவருகின்றனர். இந்த சூழலில் இருந்து மீட்டுக்கொண்டுவரவேண்டிய அரசு இதுபோல சொல்வது இனி மக்களை பற்றி அரசு கவலைப்படாமல் கை விரித்துவிட்டதாக என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பலரும் எண்ணுகின்றனர்.

banner

Related Stories

Related Stories