இந்தியா

“கொரோனா தொற்று வேகம் ஜூன், ஜூலையில் உச்சத்தைத் தொடும்” - எய்ம்ஸ் இயக்குநர் ‘பகீர்’ தகவல்! #Covid19

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் ஜூன் - ஜூலை மாதங்களில் உச்சத்தைத் தொட வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

“கொரோனா தொற்று வேகம் ஜூன், ஜூலையில் உச்சத்தைத் தொடும்” - எய்ம்ஸ் இயக்குநர் ‘பகீர்’ தகவல்! #Covid19
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் ஜூன் - ஜூலை மாதங்களில் உச்சத்தைத் தொட வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.

“கொரோனா தொற்று வேகம் ஜூன், ஜூலையில் உச்சத்தைத் தொடும்” - எய்ம்ஸ் இயக்குநர் ‘பகீர்’ தகவல்! #Covid19

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தின் மாதிரியை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். அதன்படி பார்த்தால் இந்தியாவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் எனத் தெரிகிறது.

அதேசமயம், கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போதே கணித்துக் கூற முடியாது. கொரோனா தொற்றின் வீரியம் இதே அளவு இருக்குமா அல்லது மாற்றம் இருக்குமா என்பதையும் இப்போதே கூற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories