தமிழ்நாடு

இன்று 580 பேருக்கு தொற்று... 2 பேர் பலி - தமிழகத்தைச் சூழும் ‘கொரோனா’ மேகம்! #CoronaUpdates

சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று 580 பேருக்கு தொற்று... 2 பேர் பலி - தமிழகத்தைச் சூழும் ‘கொரோனா’ மேகம்! #CoronaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் இன்று மட்டும் 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5409-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 316 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,644 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 45 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடர்பான பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் மட்டும் 1,806 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பால் இன்று இருவர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,547 ஆக உள்ளது.

banner

Related Stories

Related Stories