இந்தியா

“பணப்புழக்கத்தை அதிகரிப்பதுதான் பொருளாதாரத்தை மீட்க ஒரே வழி” - நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி அட்வைஸ்!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான கலந்துரையாடலில், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி யோசனை வழங்கியுள்ளார்.

“பணப்புழக்கத்தை அதிகரிப்பதுதான் பொருளாதாரத்தை மீட்க ஒரே வழி” - நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி அட்வைஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பொருளாதார அறிஞர்களுடன் நேர்காணல் நடத்தி வருகிறார்.

கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் நேர்காணல் நடத்தியதை அடுத்து, இன்று, நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியுடன் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வது குறித்து ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

அதில், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் போன்று அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் இல்லாத மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் இப்போதைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்க முடியும். ஊரடங்கு முடிந்த பிறகு மக்களுக்கு தற்காலிகமான ரேசன் அட்டைகளை வழங்க வேண்டும். அதாவது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, ஆதார் அட்டையை தேசிய அளவிலான அடையாளமாக கருத்தில் கொண்டு எங்கிருந்தாலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

கடன் தொகைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். நடப்பு காலாண்டிற்கான கடன் தவணையை அரசு ரத்து செய்ய வேண்டும். மிகவும் ஏழை எளிய மக்களுக்கு உரிய நிவாரணத் தொகையை அளிக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பணத்தை செலவிடும் வாய்ப்பு ஏற்படும். இது பொருளாதாரத்திற்கு உந்துதலாக இருக்கும்.

பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவதே பொருளாதாரத்தை மீட்டெடுக்க எளிமையான வழி. இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் கையில் பணம் கிடைக்கும். இது உற்பத்தியை பெருக்கி பொருளாதார சங்கிலித் தொடர் அறுபடாமல் காக்கும்.

banner

Related Stories

Related Stories