இந்தியா

“மத்திய அரசின் வழிப்பறிக் கொள்ளை” : ஊர் அடங்கலாம் - நம் உள்ளம் அடங்கலாமா? - ஆழி செந்தில்நாதன்

தமிழ்நாடு தன் சொந்தப் பணத்தில்கூட தனக்குத் தேவையான கருவிகளை வாங்குவதைத் தடைசெய்கிறது. வாங்கியப் பொருள்களை ஒரு வழிப்பறிக்கொள்ளைக் காரனைப் போல கைப்பற்றுகிறது என ஆழி செந்தில்நாதன் குற்றச்சாட்டியுள்ளார்.

“மத்திய அரசின் வழிப்பறிக் கொள்ளை” : ஊர் அடங்கலாம் - நம் உள்ளம் அடங்கலாமா? - ஆழி செந்தில்நாதன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசின் அறிவிப்பால் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தமிழகத்துக்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கருவி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழக அரசின் கருவிகளை மத்திய அரசு பிரித்துக்கொடுக்கும் என வகுப்பட்ட விதி முறைக்கு தற்போது கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக, தன்னாட்சித் தமிழகம் அமைப்பைச் சார்ந்த எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு தன் மக்களின் தேவைக்காக வாங்கிய கொரோனா பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு இடையில் வழிப்பறிச் செய்திருக்கிறது என்கிற தகவல் இப்போது தமிழ்நாட்டில் ஒரு கடும் கோபத்தைக் கிளறியிருக்கிறது.

சுதாதாரத் துறையில் ஒரு மாநிலத்துக்கு உள்ள அரசியல்சாசன ரீதியிலான அங்கீகாரத்தின் அடிப்படையில் அந்த மாநிலம் உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் தனக்குத் தேவையான மருந்துகளையோ கருவிகளையோ வாங்கமுடியும். அப்படிப்பட்ட இறக்குமதிகள் அனைத்தும் இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி விதிகளுக்குட்ப்பட்டுத்தான் நடக்கின்றன.

“மத்திய அரசின் வழிப்பறிக் கொள்ளை” : ஊர் அடங்கலாம் - நம் உள்ளம் அடங்கலாமா? - ஆழி செந்தில்நாதன்

இந்த நிலையின் தனக்குத்தேவையான அதி அத்தியாவசியமான பொருள்களை வாங்க தமிழ்நாடு அரசு முயற்சிச் செய்திருக்கிறது. ஆனால் அந்த பரிசோதனைக் கருவிகள் நம் கைக்குவருவதற்கு முன்னர் இடையிலே புகுந்த இந்திய அரசு வழிப்பறிக்கொள்ளைக்காரனைப் போல அதைத் தட்டிப்பறித்திருக்கிறது.

தன் கொள்ளையை நியாயப்படுத்திக்கொள்வதற்காக திடீரென ஒரு புதிய ஆணையைப் பிறப்பித்து மாநிலங்கள் நேரடியாக இவற்றைக் கொள்முதல் செய்யக்கூடாது என்று வழிப்பறிக் கொள்ளைக்காரனிடமிருந்து ஆணையும் வந்திருக்கிறது.

என்ன அசிங்கம், என்ன அயோக்கியத்தனம், என்ன சட்ட விரோதம்! தனக்குத் தேவையான கருவிகளை வாங்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த சட்டமீறலைச் செய்திருக்கிறது என்று டெல்லிக் கொள்ளையர்கள் கருதுகிறார்கள்?

கொரானோ வைரஸ் தொற்றுக்கு எதிரான இந்த மிகப்பெரிய போராட்டத்தை இந்தியாவில் மாநில அரசுகள்தான் சிறப்பாகவோ அல்லது குறைபாடுகளுடனோ முடிந்தவரை செய்துகொண்டிருக்கின்றன. அவர்களிடம்தான் அதற்கான தல அளவிலான நிர்வாகக் கட்டமைப்பும் அதிகாரத் துறைகளும் இருக்கின்றன. அப்படி செயல்படும் மாநில அரசுகளுக்கு உதவி செய்யவேண்டிய மத்திய அரசு அந்த மாநிலங்களின் அதிகாரத்தை வழக்கம் போல குறைக்க முயற்சி எடுக்கின்றன.

“மத்திய அரசின் வழிப்பறிக் கொள்ளை” : ஊர் அடங்கலாம் - நம் உள்ளம் அடங்கலாமா? - ஆழி செந்தில்நாதன்

பெருவெள்ளம் ஏற்பட்டபோது கேரளாவுக்கு உதவ முன்வந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி உதவியை இடையில் நின்று தடுத்து நிறுத்திய மோடி அரசாங்கம். இப்போது தமிழ்நாடு தன் சொந்தப் பணத்தில்கூட தனக்குத் தேவையான கருவிகளை வாங்குவதைத் தடைசெய்கிறது. தடை செய்வது மட்டுமல்ல. வாங்கியப் பொருள்களை கூச்சமே இல்லாமல் இடையிலே ஒரு வழிப்பறிக்கொள்ளைக் காரனைப் போல கைப்பற்றுகிறது. இதை நாம் சொல்லவில்லை. நேற்று தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் சண்முகம்தான் செய்தியாளர்களிடம் சொற்களை மென்று விழுங்கியபடிச் சொன்னார்.

குனிந்துகுனிந்தே பழக்கப்பட்டுப்போன தமிழக அரசு வழிப்பறி செய்த பொருள்கள் பங்கிடப்பட்டு தமது பங்கு வரும் எனக் காத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு இதைவிட பெரிய துரோகம் ஒன்றை இந்திய அரசு இழைத்துவிடமுடியுமா என்று தெரியவில்லை.

இது காலம் காலமாக நடப்பதுதான் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. பல வெளிநாடுகள் வளர்ச்சியின் பொருட்டு வழங்கும் இலவச மானிய உதவித்தொகைகளை வாங்கி அவற்றை மாநில அரசுகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் அயோக்கியப் பயல்கள்தான் இந்த மத்திய அரசுக்காரர்கள் என்பதையும் இந்திய தேசியம் என்பதே பனியா ஏகாதிபத்திய ஏற்பாடுதான் என்பதையும் நாம் எப்போது விளங்கிக்கொள்ளப்போகிறோம் என்று தெரியவில்லை.

முதலில் நமது நிதி ஆதாரங்களை அழித்தார்கள். நமது வரி இறையாண்மையை பிடுங்கினார்கள். பிறகு வரியில் நமக்கான பங்கை தர காலதாமதம் செய்தார்கள். பிறகு இந்தியாவின் பொருளாதாரத்தில் நமது பங்குக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு தராமல் ஏய்த்தார்கள். வட மாநிலங்களுக்கே பெரும்பான்மையான நிதியை ஒதுக்கி நம்மைப் புறக்கணித்தார்கள்.

சாதாரணக் காலத்தில் மட்டுமல்ல பேரிடர் காலத்தில்கூட நம்மை கையேந்த வைக்கிறார்கள். புயலோ வெள்ளமோ கொரோனாவோ - ஒவ்வொரு முறையும் நமது முதல்வர்கள் தில்லியிடம் பிச்சை கேட்கவேண்டியிருக்கிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் என்று பெயர் வாங்கியிருக்கிறோம். ஆனால் தில்லியிடம் பிச்சைக்காரனைக் கைகட்டி நிற்கிறோம்.

“மத்திய அரசின் வழிப்பறிக் கொள்ளை” : ஊர் அடங்கலாம் - நம் உள்ளம் அடங்கலாமா? - ஆழி செந்தில்நாதன்

இப்போதைக்குப் போதாக்குறைக்கு அந்தத் தில்லிக்காரன் ஒரு வழிப்பறிக்கொள்ளை செய்கிறான். நாம் கொந்தளிக்கவேண்டாமா? தமிழ்நாட்டின் தேவைக்கேற்ப தமிழக எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உரிமை உடையது என்பதை மறந்துவிடவேண்டாம். குறிப்பாக சுகாதாரத் துறையில் எந்த கொம்பனும் நம்மிடம் வந்து வாலாட்டுவதை ஏற்கமுடியாது.

மோடி அரசாங்கம் தமிழ்நாட்டைப் பழிவாங்குகிறது. தமிழ்நாட்டின் பலத்தைச் சிதைக்கவிரும்புகிறது. காலம் காலமாக மத்திய அரசின் புறக்கணிப்புகளால் பலவீனமடைந்திருந்த தமிழ்நாடு தானாகவே தனக்கான வழியைக் கண்டறிந்து முன்னேறியிருக்கிறதே, அதற்காக தமிழ்நாட்டை தண்டிக்க விரும்புகிறது ஆரியப் பேரரசு.

அதுதான் நாம் புரிந்துகொள்ளவேண்டிய செய்தி. தமிழ்நாட்டின் தன்னாட்சிக்கான பரந்துபட்டப் போராட்டத்தை முன்னெடுக்காமல் இந்த நிலையை நாம் மாற்றமுடியாது. அதற்கான காரணங்களை இந்த சங்கிகளே உருவாக்கித்தருகிறார்கள். ஆனால், உடனடியாக, கட்சி. இயக்க வேறுபாடின்றி தமிழ்நாட்டின் நலனுக்காக நாம் குரலெழுப்பவேண்டும். குறிப்பாக, சுகாதாரத் துறையில் நமக்குள்ள இறையாண்மையைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும். நீட்டில் கோட்டைவிட்டுவிட்டோம் என்பதால் சோர்ந்துபோகவும் வேண்டாம். ஊர் அடங்கலாம். உள்ளம் அடங்கலாமா?” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories