இந்தியா

“இந்துத்வா கும்பல் பரப்பும் வதந்தியால் வாழ்வாதாரம் இழந்த முஸ்லிம் வியாபாரிகள்” : டெல்லியில் கொடூரம்!

டெல்லியில் சாலைகளில் வாகனங்களில் காய்கறி பழங்கள் விற்கும் வியாபாரிகளிடம் ஆதார் அட்டை கேட்டு அவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் அவர்களை அங்கிருந்து அடித்து விரட்டும் கொடூரம் நடந்துள்ளது.

“இந்துத்வா கும்பல் பரப்பும் வதந்தியால்  வாழ்வாதாரம் இழந்த முஸ்லிம் வியாபாரிகள்” : டெல்லியில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் தனது தீவிரத்தன்மையை காட்டத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பற்றி வதந்திகளையும் இஸ்லாமியர்கள் மீதும் வெறுப்பு பிரச்சாரத்தையும் இந்துத்வா கும்பல்கள் தீவிரமாகப் பரப்பி வருகின்றனர்.

கடந்த காலங்களில் அரசின் மீது குற்றச்சாட்டோ அல்லது அரசின் தவறான நடவடிக்கைகளை பொதுமக்களே சுட்டிக்காட்டும் நிலை வந்தால் அந்த பிரச்னைக்கு இஸ்லாமியர்களும், சிறுபான்மையின சமூகத்தினருமே காரணம் என்கிற ரீதியிலான பொய்களை அதிகாரத்தில் உள்ளவர்களே பேசிவந்தனர்.

அதன் தொடர்சியாக உலகே கொரோனாவைக் கண்டு அஞ்சி தற்காப்பு நடவடிக்கையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும்தான் கொரோனாவிற்கு மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் வேலையில் மோடி அரசின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

“இந்துத்வா கும்பல் பரப்பும் வதந்தியால்  வாழ்வாதாரம் இழந்த முஸ்லிம் வியாபாரிகள்” : டெல்லியில் கொடூரம்!

அப்படி சமீபத்தில், சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் பிறர் சாப்பிடும் உணவு தட்டுகளில் எச்சில் மூலம் கொரோனா பரப்புவதாகவும், இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் அவர்கள் விற்கும் பொருட்கள் மூலம் கொரோனா தொற்றைப் பரப்பி வருவதாகவும் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளில் மக்கள் பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று இந்துத்வா கும்பலைச் சேர்ந்த சிலர் டெல்லியில் சாலைகளில் வாகனங்களில் காய்கறி- பழங்களை வைத்து விற்கும் வியாபாரிகளிடம் ஆதார் அட்டை கேட்டு அவர்கள் இஸ்லாமியர்கள் என்றால் அவர்களை அங்கிருந்து அடித்து விரட்டும் கொடூரமும் நடந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், டெல்லி சாஸ்திரி நகர் பகுதியில் ஊரடங்கை மீறி 20-க்கும் மேற்பட்டோர் சாலையில் நாற்காலிகளில் அமர்ந்து அந்தப் பகுதியில் இனி ஒரு இஸ்லாமியர் கூட காய்கறி, பழங்களை விற்கக் கூடாது என்று மிரட்டுகின்றனர்.

அதில் பழங்கள் விற்கும் இஸ்லாமியரின் ஆதார் கார்டை கேட்டு, இனி இங்கு நிற்கக்கூடாது எனவும் சிலர் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கடன் வாங்கி பழங்களை விற்றுவந்த வியாபாரி அன்றைய தினம் பெரும் நஷ்டத்தை சந்தித்திருப்பார்.

இந்துத்வா கும்பல் அச்சுறுத்தலால் அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய வியாபாரிகள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories