இந்தியா

“தப்லிகி ஜமாத்தை சேர்ந்த கொரோனா பாதித்தவர் போலிஸ் மீது எச்சில் துப்பினாரா?” - உண்மை அம்பலம்! #FactCheck

கொரோனாவிற்கு மதச் சாயம் பூசி அரசியல் ஆதாயம் அடைய நினைக்கும் வேலையில் மோடி அரசின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

“தப்லிகி ஜமாத்தை சேர்ந்த கொரோனா பாதித்தவர் போலிஸ் மீது எச்சில் துப்பினாரா?” - உண்மை அம்பலம்! #FactCheck
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் தனது தீவிரத்தன்மையை காட்டத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் கொரோனா பற்றி வதந்திகளையும் இஸ்லாமியர்கள் மீதும் வெறுப்பு பிரச்சாரத்தையும் இந்துத்வா கும்பல்கள் தீவிரமாகப் பரப்பி வருகின்றனர்.

கடந்த காலங்களில் அரசின் மீது குற்றச்சாட்டோ அல்லது அரசின் தவறான நடவடிக்கைகளை பொதுமக்களே சுட்டிக்காட்டும் நிலைக்கு வந்தப் பிறகு அந்த பிரச்னைக்கு இஸ்லாமியர்களும், சிறுபான்மையின சமூகத்தினருமே காரணம் என்கிற ரீதியிலான பொய்களை அதிகாரத்தில் உள்ளவர்களே பேசிவந்தனர்.

அதன் தொடர்சியாக உலகே கொரோனாவை கண்டு அஞ்சி தற்காப்பு நடவடிக்கையும், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில், இந்தியாவில் மட்டும்தான் கொரோனாவிற்கு மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் அடையநினைக்கும் வேலையில் மோடி அரசின் ஆதரவாளர்கள் இறங்கியுள்ளனர்.

அப்படி சமீபத்தில் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மீதான வன்மத்தை விதைக்கும் வகையில் ஒரு வீடியோ அதிகம் பரப்பப்பட்டு வந்தது. கடந்த வியாழக்கிழமை செளத்ரி என்பவர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த பின்பு பலரும் “யாருக்கு ஆதாரம் தேவை, இதைப் பாருங்கள்” எனப் பதிவிட்டு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் இருக்கும் ஒருவர் போலிஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது எதிரே உள்ள போலிஸார் மீது எச்சில் உமிழ்கிறார். பின்னர் போலிஸார் அவர்மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் தப்லிகி ஜமாத் அமைப்பைச் சார்ந்தவர்கள், தனிமைப்படுத்த ஒத்துழைக்காமல் திட்டமிட்டு நோய்த் தொற்றை பரப்பி வருவதாகவும், அவர்கள் இந்தியாவை சிதைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர் எனப் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ உண்மையா எனத் தெரியாமலே பல ஊடகத்தினரும் அதனைப் பகிரத் துவங்கியுள்ளனர்.

“தப்லிகி ஜமாத்தை சேர்ந்த கொரோனா பாதித்தவர் போலிஸ் மீது எச்சில் துப்பினாரா?” - உண்மை அம்பலம்! #FactCheck

இந்நிலையில், இந்த வீடியோ பற்றிய உண்மைத் தகவல்கள் ஆங்கில ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அதன்படி, மும்பை மிரர் இணையதளத்தில் பிப்ரவரி 29ம் தேதி அன்றே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அதில் போலிஸ் வாகனத்தில் போலிஸர் மீது எச்சில் துப்பும் நபரின் பெயர் முகமது சுஹைல் செளகத் அலி. இவர் மும்பை நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது அவரின் குடும்பத்தினர் சமைத்துக் கொடுத்த உணவை போலிஸார் சாப்பிட அனுமதிக்கவில்லை.

அதனால் ஆத்திரத்தில் அந்த இளைஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலிஸார் மீது எச்சில் துப்பியுள்ளார். இந்த வீடிவோவில் 27 விநாடிகள் கொண்ட பகுதியை மட்டும் வெளியிட்டுள்ளார்கள். இதன்மூலம் இந்த வீடியோவில் காணப்படும் நபர், தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடையவர் என்பது பொய்யான தகவல்.

அதேபோல் இது டெல்லியில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல; மும்பையில் எடுக்கப்பட்டது எனப் பகிரப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories