இந்தியா

அமெரிக்காவின் கள்ளத்தனம்: “அணு ஒப்பந்தத்தை நிறுத்திய மன்மோகன் சிங்” - 2005ல் நடந்த நிகழ்வு ஒரு பார்வை!

இன்று அமெரிக்க அதிபரின் மிரட்டலுக்கு அடிபணிந்து மருந்துகளை ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி அனுமதித்துள்ளார்.

அமெரிக்காவின் கள்ளத்தனம்: “அணு ஒப்பந்தத்தை நிறுத்திய மன்மோகன் சிங்” - 2005ல் நடந்த நிகழ்வு ஒரு பார்வை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரதமர் மோடியிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின், பாராசிட்டமால் போன்ற மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்க வேண்டும். இல்லையெனில், இந்தியா பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனக் கூறி மிரட்டியிருக்கிறார்.

இதனையடுத்து, மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஏனெனில், இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த பின்னர் பிறநாடுகளுக்கு உதவுவதில் தவறில்லை என ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர்.

Modi
Modi

இந்நிலையில், 2005ம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங், அணு ஒப்பந்தத்துக்காக அமெரிக்க கையாண்ட கள்ளத்தனத்தை தடாலடியாக மறுத்திருந்தது தொடர்பாகவும், அமெரிக்காவின் மிரட்டலும், கள்ளத்தனமும் புதிது இல்லையென உணர்த்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று உலா வருகிறது.

அதில், இந்தியா அமெரிக்கா இடையேயான அணு ஒப்பந்தத்துக்காக 2005ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமெரிக்கா சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம், முந்தைய நாள் இரவு அன்று ஒப்பந்த அறிக்கையில் சில மாற்றங்களை செய்துள்ளதாகவும், இதுதான் நாளை அறிவிக்கப்படவுள்ளது எனக் கூறி கையெழுத்துப் பெற ஆயத்தமானது.

அதற்கு கனக்கச்சிதமாக கையெழுத்திட முடியாது. ஒப்பந்தத்தை ரத்து செய்கிறேன் எனக் கூறி அவ்விடத்தை விட்டேச் சென்றிருக்கிறார் மன்மோகன் சிங். இதற்கு பிறகு, அமெரிக்காவின் Secretary of State காண்டோலீசா ரைஸ், மன்மோகன் சிங் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவரை பார்க்க மன்மோகன் சிங் மறுத்ததும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் மூலம் பேசியிருக்கிறார்.

அதன் பின்னர், ஒப்பந்த அறிக்கையில் ஒரு புள்ளி மாறியிருந்தாலும் கையெழுத்திட மாட்டேன் என திட்டவட்டமாக கூறியதாக அதிபர் புஷ்ஷிடம் சொல்லுங்கள் என மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.

அமெரிக்காவின் கள்ளத்தனம்: “அணு ஒப்பந்தத்தை நிறுத்திய மன்மோகன் சிங்” - 2005ல் நடந்த நிகழ்வு ஒரு பார்வை!

இதனையடுத்து நாடு திரும்பிய மன்மோகன் சிங், அமெரிக்காவில் நடந்தது தொடர்பாக எதையும் வெளியே சொல்லாமல், விளம்பரப்படுத்தாமல் அடுத்த பணிகளை மேற்கொண்டார் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக 2015ம் ஆண்டு Economic times நாளிதழ் கட்டுரையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், மோடியின் விசுவாசிகளோ, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற போக்கிலேயே சமாளித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories