இந்தியா

“நிர்பயா வழக்கு - குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்” : மக்கள் கொண்டாட்டம்!

நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் தூக்கு தணடனை நிறைவேற்றப்பட்டது.

“நிர்பயா வழக்கு - குற்றவாளிகள்  நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்” : மக்கள் கொண்டாட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் பேருந்தில் சென்றபோது,6 பேர் கொண்ட ஒரு கும்பல் மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து நடு ரோட்டில் வீீசியது.

அவருடன் சென்ற அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட மாணவியை சிங்கப்பூருக்கு உயர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மவுண்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி 13 நாட்கள் கழித்து டிசம்பர் 29-ம் தேதி உயிரிழந்தார். இந்தக் கொடிய சம்பவம், நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

“நிர்பயா வழக்கு - குற்றவாளிகள்  நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்” : மக்கள் கொண்டாட்டம்!

இந்த சம்பவத்தில், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் டெல்லி போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் மற்றும் 18 வயதாகாத ஒரு இளம் குற்றவாளி என 6 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ஏ1 - குற்றவளியான ராம்சிங் திகார் சிறையில் 2013-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘நிர்பயா’ வழக்கை விரைவு நீதிமன்றம் துரிதமாக விசாரித்தது. இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டார். முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்‌ஷய் தாக்குர் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் விரைவு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் 2014-ம் ஆண்டும், உச்ச்நீதிமன்றம் 2017-ம் ஆண்டும் உறுதி செய்தன. அதன்பின்னர் 4 பேரின் சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதி செய்தது.

“நிர்பயா வழக்கு - குற்றவாளிகள்  நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்” : மக்கள் கொண்டாட்டம்!

இந்நிலையில், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்கள் அனைத்தையும் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து வந்தது. மேலும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கொடுக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க குற்றவாளிகள் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தனர். ஆனால் நிர்பயா கொலை குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவத்தை நாட்டு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories