இந்தியா

மோடி ஆட்சியில் மோசமான சரிவைச் சந்தித்த கார் விற்பனை : மிகப்பெரிய அச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை !

இந்தியாவில் கார் விற்பனை 8.77% சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மோடி ஆட்சியில் மோசமான சரிவைச் சந்தித்த கார் விற்பனை : மிகப்பெரிய அச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.

குறிப்பாக, GST வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, BOSCH இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களின் பெரும் பகுதி உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.

மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அந்நிய முதலீட்டாளர்கள் பல்வேறு துறையில் செய்த முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். அதனால் கடந்த பிப்ரவரி மாதம் கார் விற்பனை 8.77% வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (SIAM - Society of Indian Automobile Manufacturers) தெரிவித்துள்ளது.

மோடி ஆட்சியில் மோசமான சரிவைச் சந்தித்த கார் விற்பனை : மிகப்பெரிய அச்சத்தில் இந்திய ஆட்டோமொபைல் துறை !

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், பிப்ரவரி மாதம் நாடுமுழுவதும் 2,51,516 வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. அதாவது கார் விற்பனையைப் பொறுத்தவரையில் 8.77 சதவீத வீழ்ச்சியுடன் 1,56,285 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.

அதேபோல் இருசக்கர வாகன விற்பனையில் 19.82 சதவீத வீழ்ச்சியுடன் 12,94,791 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 32.9 சதவீதம் சரிந்து 58,670 ஆகவும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த உள்நாட்டில் வாகன விற்பனை 16,46,332 ஆகவும் உள்ளது. இதன் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில் 20,34,597 ஆக இருந்தது என்பதை SIAM சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்மூலம் பெரும்பாலான இந்தியர்கள் பொருளாதார சரிவால் கார் வாங்குதை தவித்து வருகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories