இந்தியா

“மோடி ஆட்சியில் அச்சம் தரும் சூழலே நிலவுகிறது”: அமித்ஷா இருக்கும் மேடையிலேயே கலகக் குரல் எழுப்பிய பஜாஜ்!

மோடி ஆட்சியில் அச்சம் தரும் சூழலே நிலவுவதாக இந்தியாவின் மூத்த தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் அமித்ஷா முன்னிலையிலேலே விமர்சித்துள்ளார்.

“மோடி ஆட்சியில் அச்சம் தரும் சூழலே நிலவுகிறது”: அமித்ஷா இருக்கும் மேடையிலேயே கலகக் குரல் எழுப்பிய பஜாஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர்.

இந்த சூழலில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல தொழில் அதிபர்கள் கலந்துக்கொண்டனர். அந்த கூட்டத்தில் இந்தியாவின் மூத்த தொழிலதிபர் பஜாஜ் நிறுவனத்தலைவர் ராகுல் பஜாஜ், அமித் ஷா முன்னிலையில் மத்திய அரசை விமர்சித்து பேசினார்.

அதில், “எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இந்த சூழலை என் சக தொழில்துறை நண்பர்களுக்கும் உணர்வார்கள். அவர்கள் இதனை வெளிப்படையாக சொல்ல முடிவதில்லை. ஆனால் என்னால் சொல்லமுடிகிறது என்பதால் சொல்கிறேன்” என்று பேச அரம்பித்தார்.

ராகுல் பஜாஜ்
ராகுல் பஜாஜ்

அப்போது, “பா.ஜ.க அரசின் இரண்டாவது ஆட்சியில், நாங்கள் யாரைப் பற்றியும் பேசமுடியும். அதுவல்ல இங்கு பிரச்சனை. நீங்கள் நன்றாக செயல்படுகிறீர்கள், அதனை நான் மறுக்கவில்லை. ஆனாலும் சில நேரங்களில் ஏற்படும் பாதிப்பின் போது உங்களை விமர்சிக்க எங்களுக்கு பயமாக இருக்கிறது. ஒருவேலை உங்களை விமர்சித்தால், அதனை எப்படி எடுத்துக்கொள்வீர்கள். சரியாக புரிந்துக்கொள்வீர்களா என அச்சம் உருவாகியுள்ளது” என்றார்.

ராகுல் பஜாஜ் இந்த பேச்சின் போது அமித்ஷா மேடையிலேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் பஜாஜ் மத்திய அரசாங்கத்தை முன்முதலாக விமர்சிக்கவில்லை. பல முறை பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட இழப்புகளைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய ராகுல் பஜாஜ், “வளர்ச்சி என்ன வானத்திலிருந்தா வரும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories