இந்தியா

“முதலில் மற்றவர்களின் விடுதலை; பிறகுதான் அரசியல்”- 7 மாதத்திற்கு பிறகு விடுதலையான பரூக் அப்துல்லா பேச்சு!

எங்களுடைய விடுதலைக்காகப் போராடிய, குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி என ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மோடி அரசு பிரித்தது. அதுமட்டுமின்றி மாநிலங்களைப் பிரிப்பதற்கு முன்பே இராணுவத்தைக் கொண்டு காஷ்மீர் முழுவதையும் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியது.

ஃபரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட முன்னாள் முதல்வர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தது. பல்வேறு அரசியல் கட்சியினரின் எதிர்ப்புகளையும் மீறி முக்கிய தலைவர்களை விடுவிக்காமல் ஆணவமாகச் செயல்பட்டு வந்தது இந்த மோடி அரசு.

இந்நிலையில், ஏழு மாதங்களுக்குப் பிறகு ஃபரூக் அப்துல்லா மட்டும் வீட்டுச்சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஃபரூக் அப்துல்லா வீட்டில் இருந்து வெளியேறி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார்.

“முதலில் மற்றவர்களின் விடுதலை; பிறகுதான் அரசியல்”- 7 மாதத்திற்கு பிறகு விடுதலையான பரூக் அப்துல்லா பேச்சு!

அப்போது பேசிய அவர், “எங்களுடைய விடுதலைக்காகப் போராடிய, குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி. எல்லாத் தலைவர்களும் விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் இந்த விடுதலை நிறைவடையும். அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்ட பின்னர்தான் எனது அரசியல் எதிர்காலம் தொடர்பான முடிவை எடுப்பேன்.

இதுகுறித்து இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்போது உள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தி இனி டெல்லிக்குச் செல்வேன். நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உங்கள் எல்லோரது நலனுக்காகப் பேசுவேன்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories