இந்தியா

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க முதல் குரல் கொடுத்தது தி.மு.க தான்”: சரவணன் MLA பெருமிதம்!

தமிழகத்தில் முதல் முறையாக கொரோனாவிற்கு எதிராக குரல் கொடுத்தது தி.மு.க தான் என சட்டமன்றத்தில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க முதல் குரல் கொடுத்தது தி.மு.க தான்”: சரவணன் MLA பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி வரை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறவிருக்கிறது.

இன்றைய கூட்டத்தில், கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை தி.மு.க, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். கொரோனா வைரஸ் குறித்து கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்துப் பேசினார்கள்.

அதன்படி தி.மு.க சார்பில் பேசிய திருப்பரங்குன்றம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில், “டோக்கியோவில் 1,300 பேர் கொண்ட கப்பலில் 13 பேர் பாதிப்படைந்தனர். இதில் 6 பேர் இந்தியர்கள், இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க முதல் குரல் கொடுத்தது தி.மு.க தான்”: சரவணன் MLA பெருமிதம்!

ஆனால், அவர்களுக்கு பாதிப்பு இல்லாத போதும் அவர்களின் குடும்பத்தார் அச்சம் ஏற்பட்டு என்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி அவர்களை மீட்க முயற்சி எடுத்தார். தமிழகத்தில் முதல் முறையாக கொரானாவிற்கு எதிராக குரல் கொடுத்தது தி.மு.கதான்” என்று தெரிவித்தார்.

மேலும், “கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க முகக் கவசங்களின் விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்பிற்காக சீனாவில் வசிக்கும் தமிழக மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories